பொதுவாக உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் குறிப்பிட்ட சில வழிமுறைகள் மூலம் அன்லாக் செய்ய முடியும்.
ஆனால் மொபைலில் உள்ள அனைத்து தரவுகளும் அழிந்துவிடும் . குறிப்பாக மொபைலில் உள்ள எஸ்எம்எஸ், மற்றவர்களின் தொடர்பு எண்கள், ஆப்ஸ், போன்ற அனைத்து தரவுகளும் அழிந்துவிடும்.
அந்தவகையில் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் அன்லாக் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
- உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால், முதலில் மொபைலை ரீசெட் செய்த பின்பு, பவர் ஆஃப் செய்ய வேண்டும்.
- அடுத்து உங்கள் மொபைலின் VOLUME BUTTON, பவர் பட்டன், ஹோம் பட்டன் போன்றவற்றை ஒன்றாக அழுத்த வேண்டும்.
- அதன்பிறகு மொபைலில் ஆண்ட்ராய்டு லோகோ காணப்படும், பின்பு பல்வேறு பட்டியல் உங்கள் மொபைலில் இடம்பெறும்.
- அதன்பின்பு கொடுக்கப்பட்ட பட்டியலில் wipe cache partition-எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து wipe data/factory reset-எனும் விருப்பத்தையும் கிளிக் செய்ய வேண்டும். பின்பு ஆம் அனைத்து பயனர் தரவு நீக்கு (yes-delete all user data) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- கடைசியாக reboot system now-என்ற விருப்பத்தை கிளிக் செய்தால், உங்கள் மொபைலை பழையபடி உபயோகம் செய்யமுடியும்.
0 comments:
கருத்துரையிடுக