WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

smart phone news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
smart phone news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Smart Phoneல் வேகமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி? பலரும் அறியாத சூப்பரான ட்ரிக்ஸ்

 

pure tamil tech news

இப்போது உள்ள தலைமுறைகளுக்கு பிடிக்காத விடயம் என்றால் ஸ்மார்ட்போனில் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிடுவது தான்.

ஸ்மார்ட்போனில் வேகமாக சார்ஜ் ஏற வேண்டும் என பலரும் விரும்புவார்கள்.

உங்களின் ஸ்மார்ட்போன்களை வேகமாக சார்ஜ் செய்ய சில எளிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்

சரியான சார்ஜரை மட்டும் பயன்படுத்த வேண்டும்

ஸ்மார்ட்போன்களை எப்போதும் அதனுடன் வழங்கப்பட்ட சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும். வீடு அல்லது அலுவலகம் போன்ற இடங்களில் கணினி இருக்கிறது என்பதற்காக கணினியில் யுஎஸ்பி கொண்டு சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். யுஎஸ்பி கொண்டு சார்ஜ் செய்யும் போது சார்ஜ் ஆக வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்து கொள்ளும். ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்ய சாதாரண சார்ஜரை மட்டும் பயன்படுத்தினால் வேகமாக சார்ஜ் செய்யலாம்.

ஏர்பிளேன் மோட்

ஸ்மார்ட்போனினை எத்தனை நிமிடங்கள் சார்ஜ் செய்தாலும் அதனினை ஏர்பிளேன் மோடில் (Airplane Mode) வைத்து சார்ஜ் செய்தால் சீக்கிரம் சார்ஜ் செய்திட முடியும். ஏர்பிளேன் மோடில் இருக்கும் போது ஸ்மார்ட்போனில் இணையம், மற்றும் நெட்வொர்க் சிக்னல் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டை நிறுத்தி போனின் இயக்கத்தை குறைக்கும். இதனால் ஸ்மார்ட்போனில் வேகமாக சார்ஜ் ஆகிவிடும். ஏர்பிளேன் மோடில் இருக்கும் போது உங்களுக்கு எவ்வித அழைப்பும், குறுந்தகவல்களும் வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தேவையற்ற அம்சங்களை நிறுத்தினால் சார்ஜ் வேகமாக ஏறும் 

ஸ்மார்ட்போனில் வை-பை, ப்ளூடூத், என்எஃப்சி, மொபைல் டேட்டா உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆஃப் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போதும் சார்ஜ் சீக்கிரம் நிரப்பப்படும். ஸ்மார்ட்போனில் தேவையற்ற அம்சங்களை ஆஃப் செய்து வைப்பதன் மூலம் சார்ஜிங் வழக்கத்தை விட வேகமாக இருப்பதை காண முடியும்.

 

ஸ்மார்ட் போனை பராமரிப்பது எப்படி? போனில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இப்படி செய்தால் போதும்…

 

ஸ்மார்ட் போனை பலரும் உபயோகப்படுத்தினாலும் அதை அவர்கள் சரியாக பராமரிக்கிறார்களா என்பது கேள்விக்குறியே!

சரி, ஸ்மார்ட் போன்களை பராமரிப்பது எப்படி என காண்போம்.

பேட்டரி & சார்ஜிங்

உங்கள் பேட்டரியை எப்பொழுதும் முழுவதுமாய் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள், எனவே அவசர நேரத்தில் நீங்கள் வாய்ஸ் காலிங் அல்லது மெசேஜ் அனுப்ப எந்த தடையும் இல்லாமல் இருக்க முடியும். மேலும், எப்போதும் உங்கள் மொபைல் போன் உற்பத்தியாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட உண்மையான பேட்டரிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள்.

டச் லாக்

உங்கள் போனின் டச் லாக் மற்றும் கீப்பேட் லாக் சேவைகளை எப்பொழுது லாக் செய்து வைப்பது அவசியம். இதனால் உங்கள் போன், உங்கள் ஹேண்ட்பேக் அல்லது சட்டைப் பைகளில் இருக்கும் பொழுது நிகழும் தேவை இல்லாத அழைப்புகள் மற்றும் செயலிகள் டெலீட் ஆவது தடுக்கப்படும்.

ஸ்மார்ட் போன்களை சுத்தம் செய்வது அவசியம்

உங்கள் போன்களை மென்மையான துணியால் அடிக்கடி சுத்தம் செய்யலாம். ஏனெனில் தூசிகள் மற்றும் அழுக்குகள் உங்களின் போன்களை பாதிக்கக்கூடும். தண்ணீர், கடுமையான சோப்பு திரவம், சால்வெண்ட் அல்லது கடுமையான இரசாயனங்கள் போன்ற திரவங்களை போனில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

அப்படி திரவங்கள் மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் பட்டுவிட்டால் உங்கள் போன் சேதமடையக் கூடும், அதனால் உங்கள் போன்களை சில நேரங்களில் உலர வைப்பது அவசியம்.

மொபைல் போன் கவர்

தேவை இல்லாத கீறல்கள், தூசி மற்றும் அழுக்குகளிலிருந்து உங்கள் போனை பாதுகாத்துக்கொள்ள நல்ல உறுதியான மொபைல் கவர்களை பயணப்படுத்துங்கள். உங்கள் போனை கையிலிருந்து நழுவவிடுவது அல்லது தேவையில்லாமல் வேகமாக அசைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கவும்.

 

 

உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டதா? இதனை எப்படி அன்லாக் செய்வது?

பொதுவாக உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் குறிப்பிட்ட சில வழிமுறைகள் மூலம் அன்லாக் செய்ய முடியும்.

ஆனால் மொபைலில் உள்ள அனைத்து தரவுகளும் அழிந்துவிடும் . குறிப்பாக மொபைலில் உள்ள எஸ்எம்எஸ், மற்றவர்களின் தொடர்பு எண்கள், ஆப்ஸ், போன்ற அனைத்து தரவுகளும் அழிந்துவிடும்.

forget password pure tamil yech news in tamil

அந்தவகையில் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் அன்லாக் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். 

  • உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால், முதலில் மொபைலை ரீசெட் செய்த பின்பு, பவர் ஆஃப் செய்ய வேண்டும்.

  • அடுத்து உங்கள் மொபைலின் VOLUME BUTTON, பவர் பட்டன், ஹோம் பட்டன் போன்றவற்றை ஒன்றாக அழுத்த வேண்டும்.

  • அதன்பிறகு மொபைலில் ஆண்ட்ராய்டு லோகோ காணப்படும், பின்பு பல்வேறு பட்டியல் உங்கள் மொபைலில் இடம்பெறும்.

  • அதன்பின்பு கொடுக்கப்பட்ட பட்டியலில் wipe cache partition-எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

  • அடுத்து wipe data/factory reset-எனும் விருப்பத்தையும் கிளிக் செய்ய வேண்டும். பின்பு ஆம் அனைத்து பயனர் தரவு நீக்கு (yes-delete all user data) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

  • கடைசியாக reboot system now-என்ற விருப்பத்தை கிளிக் செய்தால், உங்கள் மொபைலை பழையபடி உபயோகம் செய்யமுடியும். 

15600mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்... இதன் விலை மற்றும் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா?

 இன்றைய நவீன காலக்கட்டத்தில் செல்போன் தேவைகள் அதிகரிப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. பல ஸ்மார்ட்போன்கள் தற்போது பேட்டரி அதிகமாக புழக்கத்துடன் வந்துள்ளது,.

அந்த வகையில், Oukitel நிறுவனம் WP15 என்ற சூப்பரான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது,. இந்த போனில், 15600 mAh பேட்டரி உள்ளதாம்.மேலும் மீடியாடெக் டிமான்சிட்டி 700 ப்ரோசெசர் போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்க சந்தையில், Oukitel நிறுவனம் WP15 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது, இது வலுவான பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Oukitel WP15 இன் சிறப்பம்சம் அதன் பேட்டரி. இதில் 15600 mAh பேட்டரி உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 நாட்கள் பேட்டரி பேக்கப் கொடுக்கும் திறன் கொண்டது. இது தவிர, போன் அதன் செயலி போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

மீடியாடெக் டிமான்சிட்டி 700 ப்ரோசெசர் போனில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அதன் விலை மற்றும் அம்சங்களின் முழு விவரங்களையும் பார்ப்போம். நாங்கள் உங்களுக்குச் சொன்னது போல, இந்த போனில் சிறப்பு 15600 mAh பேட்டரி ஆகும், இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 நாட்கள் பேட்டரி பேக்கப்பை வழங்குகிறது.

அதே நேரத்தில், பூஜ்ஜியத்திலிருந்து 100%வரை சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும். இந்த போனின் பேட்டரி 18W ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜ் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது தவிர, வேறு எந்த போன் அல்லது சாதனத்தையும் இந்த போனிலிருந்து சார்ஜ் செய்யலாம்.

mobile news pure tamil tech

Oukitel WP15 ஸ்மார்ட்போன் 6.52-இன்ச் HD+ வாட்டர் டிராப் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் பிக்சல் ரெஸலுசன் 720 × 1600 ஆகும். இந்த போனில் MediaTek Dimensity 700 ப்ராசசர் மற்றும் 8 GB ரேம் பொருத்தப்பட்டுள்ளது.

இது 128 ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை அதிகரிக்க முடியும். Oukitel WP15 IP68 மற்றும் IP69K ரேட்டிங்க்ளை கொண்டுள்ளது.

இது தூசி மற்றும் வாட்டர் ஆதாரம். இதை 1.5 மீட்டர் வரை தண்ணீரில் எளிதாகப் பயன்படுத்தலாம். போனில் மூன்று பின்புற கேமரா உள்ளது, அதன் முதன்மை சென்சார் 48 மெகாபிக்சல்கள். இரண்டாவது 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் மூன்றாவது 0.3 மெகாபிக்சல் வெர்ஜுவால் சென்சார்.

போனில் செல்ஃபிக்கு AI சென்சார் உள்ளது. இதன் விலை $ 299.99 அதாவது சுமார் ரூ .22,283. எந்த 100 வாடிக்கையாளர்கள் முதலில் அதை வாங்குகிறார்களோ, அவர்களுடன் இலவச ஸ்மார்ட்வாட்ச் வழங்கப்படும். அதே நேரத்தில், 101 முதல் 600 வாடிக்கையாளர்களுக்கு இலவச இயர்பட்கள் வழங்கப்படும்.



மொபைல் பிரைவசி குறித்த சாம்சங்கின் அபார சிந்தனை.. Alt Z Life தொழில்நுட்பத்துடன் கூடிய Galaxy A51, A71

 உங்களது மொபைலை யாராவது கேட்கும்போது, ஏதாவது ஒரு தருணத்தில் கண்டிப்பாக நீங்கள் தயங்கியிருப்பீர்கள். உங்கள் மொபைலில் கேம் ஆட கேட்கும்போதோ அல்லது ஒரு நிகழ்ச்சியில் செல்ஃபி எடுக்கலாம் என உங்கள் மொபைலை கேட்கும்போதோ, அதை கொடுக்க நீங்கள் தயங்கியிருக்கிறீர்களா? நீங்கள் தயங்கியதற்கு ஒரே காரணம், உங்கள் மொபைலில் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் உங்களது தனிப்பட்ட விஷயங்களையோ தகவல்களையோ மற்றவர்கள் பார்த்துவிடுவார்களோ என்பதுதான்.

இதுவரை நீங்கள் மொபைல் பிரைவசி குறித்து பயந்திருந்தால் பரவாயில்லை. இனிமேல் உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். Alt Z Life தொழில்நுட்பத்தின் மூலம் உங்களது மொபைல் பிரைவசி பாதுகாக்கப்படும். இதற்கு நீங்கள் நீண்டகாலம் காத்திருக்க தேவையில்லை.

Alt Z Life தொழில்நுட்பத்துடன் கூடிய Galaxy A51 மற்றும் A71 ஆகிய மொபைல்களை அறிமுகம் செய்கிறது சாம்சங். இந்த மொபைல்களில் பிரைவசி பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக Quick Switch(குயிக் சுவிட்ச்) மற்றும் Intelligent Content Suggestion ஆகிய 2 சிறப்பம்சங்கள் உள்ளன.

இந்த 2 சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இதுமாதிரியான ஸ்மார்ட்ஃபோன் பிரைவசியை இதற்கு முன் நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள். நீங்கள் மெட்ரோ ரயிலில் சென்று கொண்டிருக்கிறீர்கள் அல்லது உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் ஃபோட்டோ கேலரியை பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்களுக்கு அருகில் இருக்கும் நபர், உங்கள் மொபைலை நோட்டமிட நினைத்தால் அதை உங்களால் Quick Switch வசதியின் மூலம் முறியடிக்க முடியும். அந்த நொடி தயங்காமல் power switch- 2 முறை அழுத்தினால் போதும்.. உடனடியாக தொழில் நுட்பங்கள் சார்ந்த ஏதாவது விஷயங்கள் திரையில் தோன்றி விடும். இப்படி நமது நடவடிக்கைகளை பிறர் அறியாத வண்ணம் நாம் நேர்த்தியாக சந்தேகம் வராமல் பாதுகாக்க முடியும். அதை எப்படி செய்வது என்ற செயல்முறையை கீழ்க்கண்ட வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

 

Intelligent Content Suggestion உங்கள் வாழ்க்கையை இன்னும் எளிதாக்கும்.  Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகிய இரண்டிலுமே On Device AI என்ற வசதி உள்ளது. எவற்றையெல்லாம் நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவற்றை On Device AI மூலம் உங்களால் பாதுகாத்துக்கொள்ள முடியும். சாம்சங் Galaxy A51 மற்றும் A71 மொபைல்கள் பிரைவசி சிறப்பம்சங்கள் மட்டுமல்லாது சிறந்த ஃபோட்டோ அனுபவத்தை வழங்கும் மொபைல்கள். quad-camera  செட்டப் உங்களுக்கு மிகச்சிறந்த, வண்ணமயமான ஃபோட்டோ அனுபவத்தை வழங்கும்.

வெளிச்சமான இடமோ அல்லது வெளிச்சம் குறைவான மங்கலான இடமோ எப்படிப்பட்ட வெளிச்சத்திலும் உங்களுக்கு மிகச்சிறந்த ஃபோட்டோக்களை வழங்கும். அந்த ஃபோட்டோக்களை பதிவிட்டால் உங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழுக்க முழுக்க நேர்மறையான கருத்துகளும் பாராட்டுக்களும் குவியும்..

சரியான ஃப்ரேம் செட் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; நீங்கள் அதுபற்றியெல்லாம் கவலைப்படவே தேவையில்லை. ஒரே டேக்கில் அருமையான ஃபோட்டோக்களை  பெற முடியும். நீங்கள் ஃபோட்டோ எடுக்கும்போது உங்கள் நண்பர்கள் ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது டென்னிஸ் போன்ற வேகமான நகர்தலை கொண்ட போட்டிகளையோ நீங்கள் ஃபோட்டோ எடுக்க விரும்பினால் கேமரா அப்ளிகேஷனை ஆன் செய்தால் போதும். 7 ஃபோட்டோக்கள் மற்றும் 3 வீடியோக்களை உங்களால் பெற முடியும் 

Night Hyperlapse, Smart Selfie Angle, Quick Video, Custom Filter, Switch Camera(ரெக்கார்ட் செய்யும்போது), AI Gallery Zoom ஆகிய பல பிரத்யேக சிறப்பம்சங்கள் உள்ளன. எனவே Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகிய மொபைல்களின் மூலம் கண்டிப்பாக மற்றவர்களை விட சிறந்த ஃபோட்டோக்களை நீங்கள் எடுக்க முடியும்.

நீங்கள் உங்களது பர்ஸை வீட்டில் மறந்துவைத்துவிட்டு சென்றாலும், Samsung Pay மூலம் நீங்கள் உங்களது தினத்தை எந்த சிக்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க முடியும். 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் Galaxy A51 மொபைல் தான் உலகளவில் அதிகமாக விற்பனையான மொபைல் என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. கடும் போட்டி நிறைந்த மொபைல் விற்பனை சந்தையில், இது மிகப்பெரும் சாதனை. மிகச்சிறந்த கேமரா, நீடித்து நிலைக்கும் பேட்டரி ஆகியவை உங்களது வாழ்க்கையேயே மாற்றிவிடும்.

Galaxy A51 2 வடிவங்களில் கிடைக்கிறது. 6GB + 12GB, 8GB + 128GB

கல்வி,  தொழில்நுட்பம்

என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.