உங்களின் கூகிள் டிரைவ் (Google Drive) அல்லது கூகிள் போட்டோஸ் (Google Photos) இடங்களிலிருந்து டெலீட் செய்யப்பட்ட புகைப்படங்களை மீண்டும் நீங்கள் சுலபமாக மீட்டெடுக்க வேண்டுமா? அப்போ, இந்த பதிவு உங்களுக்கானது தான். நீங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலையோ உங்களின் கூகிள் டிரைவ் அல்லது கூகிள் போட்டோஸ் இடங்களின் ஏதேனும் ஃபைல்களை டெலீட் செய்திருந்தால் இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் நீக்கிய புகைப்படங்கள், கோப்புகள் அல்லது வீடியோக்களை மீட்டெடுக்க ஒரு சுலபமான வழி உள்ளது.
டெலீட் செய்த புகைப்படங்கள் மற்றும் ஃபைல்களை மீண்டும் மீட்டெடுக்க வேண்டுமா?
கூகிள் தேடல் நிறுவனமானது நீங்கள் டெலீட் செய்த புகைப்படங்கள் மற்றும் ஃபைல்களை மீண்டும் மீட்டெடுக்க உங்களை அனுமதிக்கிறது. அதாவது, மீண்டும் ரீஸ்டோர் (Restore) செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும், நீங்கள் இவற்றை மீட்டெடுக்க சில நிபந்தனைகள் உள்ளது. குறிப்பாக 30 அல்லது 60 நாட்களுக்குள் நீங்கள் டெலீட் செய்த ஃபைல்களை மட்டுமே உங்களால் மீட்டெடுக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
கூகிள் டிரைவ் இல் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை எப்படி மீட்டெடுப்பது?
கூகிள் டிரைவின் மொபைல் அல்லது டெஸ்க்டாப் பதிப்பைப் பயன்படுத்தி நீங்கள் சமீபத்தில் டெலீட் செய்த ஃபைல் அல்லது புகைப்படங்களை நீங்களே மீட்டெடுக்க முடியும். நீங்கள் ஒரு ஃபைலை நீக்கும்போது, கூகிள் ஒரு செய்தியைக் காண்பிக்கும், அது உங்கள் படம் 30 நாட்களுக்குப் பிறகு நிரந்தரமாக நீக்கப்படும் என்று தெரிவிக்கும். எனவே, 30 நாள் நேர சாளரத்திற்கு முன் உங்கள் Trash பாக்சில் இருந்து கோப்புகளை மீட்டெடுக்கலாம். உங்கள் Trash பாக்ஸை காலியாக்க அவற்றை நிரந்தரமாகவும் நீங்கள் டெலீட் செய்யலாம்.
இந்த வழிமுறையை சரியாக
பின்பற்றுங்கள் கூகுள் டிரைவ் ஆப்ஸைத் திறந்து 'Trash' போல்டருக்கு
செல்லவும். உங்கள் ஸ்மார்ட்போனின் இடது மேல் மூலையில் உள்ள ஹாம்பர்கர் மெனுவைத் தட்ட
வேண்டும். பிறகு நீங்கள் 'Trash' போல்டரைப் பார்க்கலாம். நீங்கள்
டெஸ்க்டாப் பயனர் என்றால் இந்த லிங்கை https://drive.google.com/drive/trash
கிளிக் செய்து, நேரடியாக Trash போல்டர் செல்லுங்கள்.
Restore அல்லது Delete forever விருப்பத்தை தேர்வு செய்யுங்கள் இப்போது நீங்கள் உங்கள் கூகிள் டிரைவில் உள்ள Trash போல்டர் ஃபைல்களை காணலாம். நீங்கள் மீட்டெடுக்க வேண்டிய பைலை ரைட் கிளிக் செய்து, Restore அல்லது Delete forever விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். Restore விருப்பம் அந்த ஃபைலை மீண்டும் ரீஸ்டோர் செய்ய அனுமதிக்கும். அதேபோல், Delete forever விருப்பம் அந்த ஃபைலை நிரந்தரமாக டெலீட் செய்ய அனுமதிக்கும்.
ஃபைலை மீட்டெடுக்க
முடியாவிட்டால் என்ன செய்வது? மாற்று வழி இது தான் கூகுள் டிரைவ் பயனர்கள்
ஃபைலை மீட்டெடுக்க முடியாவிட்டால், அவர்கள் அதைத் திரும்பப் பெற
வேண்டுமானால் ஒரு டிரைவ் நிபுணரைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது, பயனர்கள் நேரடியாக நிறுவனத்தை அழைத்து தொடர்பு கொண்டு சாட் மூலம் உதவியைப்
பெறலாம். நீங்கள் கூகுள் ஒன் (Google One) உறுப்பினராக இருந்தால்,
கூகுள் தயாரிப்புக்கு உதவி தேவைப்படும் போது நிறுவனத்தின் நிபுணர்களிடம்
பேச வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூகிள் போட்டோஸ்
இல் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை எப்படி மீட்டெடுப்பது? கூகிள் போட்டோஸ் 60 நாள் நேர சாளரத்தைத் தனது பயனர்களுக்கு
வழங்குகிறது. இது புகைப்படங்களை மீட்டெடுக்க மிகவும் முக்கியமானதாகச் செயல்படுகிறது.
அதேபோல், இது ஒரு நினைவகமாகச் செயல்படுவதால் மிகச் சிறந்தது.
நீங்கள் கூகிள் போட்டோஸ் இல் டெலீட் செய்த புகைப்படங்களை, நீங்கள்
மீட்டெடுக்க விரும்பினால் கீழே வரும் வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். இந்த
செயல்முறையை சரியாக பின்பற்றுங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட்டில்,
கூகிள் போட்டோஸ் ஆப்ஸைத் திறக்கவும். பின்னர் உங்கள் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவின்
அடிப்பகுதியில் இருக்கும் Library டேப் -ஐ கிளிக் செய்யவும்.
இப்போது மேலே காணப்படும் 'Trash' போல்டரைக் காண்பீர்கள். Restore
என்பதை கிளிக் செய்யுங்கள் நீங்கள் டெலீட் செய்து நீக்கிய அனைத்து புகைப்படங்களையும்
இந்த போல்டரில் நீங்கள் பார்க்கலாம். நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் புகைப்படம் அல்லது
வீடியோவை லாங் ப்ரெஸ் செய்யவும். அதன் பிறகு, Restore என்பதை
கிளிக் செய்யவும். புகைப்படம் அல்லது வீடியோ நீங்கள் டெலீட் செய்த அதன் அசல் போல்டர்
இடத்திற்கு வந்து சேரும். டெலீட் செய்த புகைப்படத்தை நீங்கள் பார்க்கவில்லையா?
Trash போல்டரில் நீங்கள் டெலீட் செய்த புகைப்படத்தை நீங்கள் பார்க்கவில்லை
என்றால், நீங்கள் அதை 60 நாட்களுக்கு முன்பு
டெலீட் செய்திருக்க வேண்டும் அல்லது Trash போல்டரில் இருந்து
நீக்கம் செய்துள்ளீர்கள் என்று அர்த்தம். உங்கள் Trash போல்டரை
நிரந்தரமாக நீக்கி அல்லது உங்கள் சாதனத்தின் கேலரி பயன்பாட்டிலிருந்து நிரந்தரமாக நீக்கியதற்கான
வாய்ப்பும் உள்ளது. புகைப்படத்தை பேக்அப் செய்யாமல், கேலரியில்
இருந்து நேரடியாக டெலீட் செய்தால் கூட இந்த சிக்கலை நீங்கள் சந்திக்கலாம்.
0 comments:
கருத்துரையிடுக