தற்போதைய தரவுகளின் படி உலகளாவிய ரீதியில் அன்றாடம் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட நபர்களால் ட்ரூ காலர் சேவை அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் பிரதான தொழிற்பாடு தெரியாத இலக்கங்களில் இருந்து அழைப்புக்கள் வரும் போது அது யாருடைய இலக்கம் என அறிந்துகொள்ள உதவுவதாகும்.இருப்பினும் ஆண்ட்ராய்டு
ஸ்மார்ட்போன்-இல் வழங்கப்பட்டுள்ள டயலர் மற்றும் மெசேஜ் ஆப்-களுக்கு பதிலாக இதனை
பயன்படுத்தவும் முடியும். இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் ஏரளமான நன்மைகளை உங்களால்
பெற்றுக்கொள்ள முடியும்.
ட்ரூ காலர்-ஆப் இல் சமீபத்தில்
வழங்கப்பட்டுள்ள அனைத்து புதிய வசதிகளையும் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனின்
கீழுள்ள இணைப்பு மூலம் நீங்கள் அதனை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக் கொள்க.
நாம் எமது முன்னைய பதிவு
மூலம் ட்ரூகாலரில் செடியூல் எஸ்.எம்.எஸ் செய்வது எப்படி? என பார்த்திருந்தோம். ட்ரூ
காலர்-ஆப் இல் வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு பயனுள்ள வசதி பற்றி இன்றைய பதிவில்
பார்ப்போம்.
ட்ரூ காலர் பேக்கப் (Truecaller
Backup)
எமது ஸ்மார்ட்போன்-இல்
பதியப்பட்டுள்ள கால் அழைப்புகள் பற்றிய தகவல்கள் (Call history), மெசேஜ்கள், தொலைபேசி இலக்கங்கள் (Contacts) போன்றவைகள் எமக்கு மிகவும்
அவசியமான ஒன்றாகும். அவைகள் எமக்கு எந்த ஒரு நேரத்திலும் தேவைப்படலாம்.
அவற்றை நாம் தொலைத்து
விட்டு தலையில் கையை வைக்கும் சந்தர்ப்பங்களும் அவ்வப்போது எமக்கு ஏற்படுவதுண்டு.
எனவே அவற்றை மிகவும்
பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான வசதியை ட்ரூ காலர்-ஆப் எமக்கு வழங்குகின்றது.
நாம் ட்ரூ காலர்-ஆப் மூலம் கால் அழைப்புகள் பற்றிய
தகவல்கள் (Call history), மெசேஜ்கள், தொலைபேசி இலக்கங்கள் (Contacts,) ஆப் செட்டிங்ஸ், ப்ளாக் லிஸ்ட் போன்றவற்றை பேக்கப்
செய்யும் போது அவைகள் அனைத்தும் கூகுள் டிரைவ்-இல் சேமிக்கப்படுவதால் எமக்கு
மேலும் பல நன்மைகள் கிடைக்கின்றன.
ட்ரூ காலர் தகவல்கள் கூகுள் டிரைவ்-இல்
சேமிக்கப்படுவதனால் நாம் பெற்றுக்கொள்ளக் கூடிய முக்கிய நன்மைகள்.
- நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் தொலைந்து போனாலும் கூட நாம் இழந்த தகவல்களை புதிய ஸ்மார்ட் போனிற்கு இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.
- நீங்கள் இந்த வசதியை பயன்படுத்தும் நாள் தொடக்கம் ஆயுள் முழுவதற்கும் உங்களது Call history, Massages, Contacts போன்றவற்றை பாதுகாக்கலாம்.
ட்ரூ காலர் தகவல்களை கூகுள்
டிரைவ்-இற்கு பேக்கப் செய்வது எப்படி?
1. ட்ரூ காலர்-ஆப் ஐ திறந்து
கொள்க அதன் இடது மேல் மூலையில் வழங்கப்பட்டுள்ள மெனு பட்டனை அழுத்துக.
பதிவிறக்கம் செய்ய வேண்டும்
எனின் இங்கே அழுத்துக.
2.
பின்னர் Setting => Backup பகுதிக்கு செல்க
3.
Backup என்பதற்கு எதிரே
வழங்கப்பட்டுள்ள ரேடியோ பட்டனை செயற்படுத்திக் கொள்க.
4. இனி Google Drive Account என்பதை அழுத்தி உங்கள் கூகுள் அக்கவுண்ட்டை தெரிவு செய்க.
5. பின்னர் தோன்றக் கூடிய இடைமுகத்தில் Allow பட்டனை அழுத்துவதன் மூலம் ட்ரூ காலர் தகவல்கள் கூகுள் டிரைவ்-இல்
சேமிக்கப்படுவதற்கான அனுமதியை வழங்குக.
6. இறுதியாக “BACK UP NOW” பட்டனை அழுத்துக.
அவ்வளவு தான். இனி உங்களது ட்ரூ காலர்
தகவல்கள் அனைத்தும் கூகுள் டிரைவ்-இற்கு பேக்கப் செய்யப்படும். அவைகள் உங்கள்
வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கப்படும்.
0 comments:
கருத்துரையிடுக