WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

Apps news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Apps news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இன்ஸ்டாவால் டீன் ஏஜ் பெண்களுக்கு ஆபத்தா… கிட்ஸ் வெர்ஷனுக்கு சிக்கல்

இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலியில் விளம்பரங்கள் இருக்காது. சிறுவர்களின் வயதுக்கு ஏற்ற உள்ளடகத்தை கொண்டிருக்கும். மேலும், பெற்றோர் குழந்தைகள் எவ்வளவு நேரம் செயலி பயன்படுத்துகின்றனர்,யாருக்கு மெசேஜ் அனுப்புகின்றனர், யாரை பின்தொடர்கின்றனர் என்பதை காண முடியும்.


பேஸ்புக் நிறுவனம் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்காக பிரத்யேகமாக தயாரித்த இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால்,  இத்தகைய செயலிகள் டீன் ஏஜ் பெண்களின் மனநிலை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து முக்கிய குழுக்கள் ஆய்வு நடத்துவதைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் தனது கிட்ஸ் செயலி அறிமுகத்தை  தள்ளிவைத்துள்ளது.


மேலும், ஃபேஸ்புக்கின் உலகளாவிய பாதுகாப்புத் தலைவர் ஆன்டிகோன் டேவிஸ் அமெரிக்க செனட் வர்த்தக துணைக்குழு முன்பு நாளை(செப்டம்பர் 30) ஆன்லைன் குழந்தைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறது குறித்தும்,டீன் ஏஜ் பெண்களுக்கு  ஏற்படும் மனநிலை பிரச்சினை குறித்தும் தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னலின் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில் ஆஜராக உள்ளார்.
தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை கூறுவது என்ன?
இந்த அறிக்கையானது பேஸ்புக் நடத்திய சொந்த ஆய்வில் இன்ஸ்டாகிராம் அதன் பயனாளர்களில் டீன் ஏஜ் பெண்களை அதிகளவில் பாதிப்பது கண்டறியப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளது. அவர்களின் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை விதைக்கிறது. குறிப்பாக, அவர்களது உடல் குறித்த கவலைகளை மேலும் அதிகரிக்க இன்ஸ்டாகிராம் வழிவகுக்கிறது ஆகும்.
கணக்கெடுக்கப்பில் மூன்று டீன் ஏஜ் பெண்களில் ஒருவருக்கு உடல் உருவப் பிரச்சினைகளை மோசமாக்கியது. அதிலும் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற இடங்களில் டீன் ஏஜ் வயது பெண்களுக்கு மனநிலை மாறியதாகவும், இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய காரணத்தினால் சில நேரங்களில் மனநிலை மாறி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளனர் என்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் தற்கொலை எண்ணங்கள் வந்ததாக 13 சதவிகித பிரிட்டிஷ் பயனர்கள் மற்றும் 6 சதவிகித அமெரிக்கப் பயனர்கள் கூறியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பேஸ்புக் டிபன்ஸ் என்றால் என்ன?
WSJ கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து பேஸ்புக் துணைத் தலைவரும் ஆராய்ச்சித் தலைவருமான பிரதிதி ராய்சவுத்ரி கருத்து பதிவிட்டிருந்தார். அவர், “நாங்கள் நடத்திய ஆராய்ச்சி, எங்கள் தளத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து, அவற்றை சரிசெய்யும் நோக்கத்தின் ஒருபகுதியாகும். எந்த இடத்தில் மேம்படுத்த வேண்டும் என்பதைக் கண்டறியவே, இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொள்கிறோம். அதன் காரணமாகவே, ஆய்வு முடிவில் மோசமான முடிவுகள் ஹைல்லைட் செய்து காட்டப்பட்டிருந்தது. அதே போல, பல டீன் ஏஜ் பெண்கள், தங்களது மோசமான சூழ்நிலையிலிருந்து வெளிவர இன்ஸ்டாகிராம் உதவியாக இருந்தது என கூறியதாக தெரிவித்தார்.


ஃபேஸ்புக்கின் கூற்று என்னவென்றால், பெரும்பாலான நேரங்களில் மன உளைச்சலில் இருந்த டீன் ஏஜ் பெண்களுக்கு இன்ஸ்டாகிராம் உதவியாக தான் இருந்துள்ளது. கவலை, தனிமை உள்ளிட்ட பல பிரச்சினைகளிலிருந்து வெளிவர உதவியுள்ளது.
பதட்டம் மற்றும் மனச்சோர்வு விகிதத்தில் இன்ஸ்டாகிராம் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது வெறும் 40 பேரின் பதில் தான். இந்த செயலியை பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், 40 பயனர்களின் பதில்களை பெரும் பங்காக எடுத்து விமர்சிப்பது சரியில்லை.
மேலும், இதுவரை  ஆய்வின் முடிவுகளை பொதுவெளியில் முழுமையாக பேஸ்புக் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கிட்ஸ் செயலியை நிறுத்த காரணம் என்ன?
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரி கூறுகையில், ” இன்ஸ்டாகிராஸ் கிட்ஸ் செயலி அறிமுகம் தற்காலிகமாக நிறுத்தவைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள், வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் இந்த தயாரிப்புக்கான மதிப்பை மற்றும் தேவையை நிரூபிக்க இந்த நேரத்தை நாங்கள் பயன்படுத்துவோம். 
இன்ஸ்டாகிராம் கிட்ஸ் என்பது 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான செயலியாக இருக்கும். ஏனென்றால், இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடர குறைந்தது 13 வயது எட்டியிருக்க வேண்டும். ஆனால், தற்போது குழந்தைகளுக்கு சிறு வயதிலே ஸ்மார்ட்போன் கிடைத்துவிடுகிறது. வயதுக்கு மீறிய சில செயலிகளை அவர்கள் பதிவிறக்கம் செய்கின்றனர்.

இதைக்கருத்தில் கொண்டு, கிட்ஸ் செயலி தொடங்க முடிவு செய்தோம். இன்ஸ்டாகிராம் கிட்ஸ் வெர்ஷனில்  குழந்தைகளை காட்டிலும் பெற்றோருக்கு அதிக கட்டுப்பாட்டையும் மேற்பார்வையும் கொடுக்கிறது. இச்செயலி 10-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டது. பெற்றோர் அனுமதியளிக்கும் பட்சத்தில் தான், இதில் சேர முடியும். இதில் விளம்பரங்கள் இருக்காது. சிறுவர்களின் வயதுக்கு ஏற்ற உள்ளடகத்தை கொண்டிருக்கும். மேலும், பெற்றோர் குழந்தைகள் எவ்வளவு நேரம் செயலி பயன்படுத்துகின்றனர்,யாருக்கு மெசேஜ் அனுப்புகின்றனர், யாரை பின்தொடர்கின்றனர் என்பதை காண முடியும் என்கிறார்.


இன்ஸ்டாகிராம் மனநிலையைப் பாதிப்பதாகக் கூறுவது ஏன்?
பெரும்பாலான சமூக ஊடகங்கள் குறிப்பிட்ட வயதினரை மனசோர்வில் ஆழ்த்துவதாக கூறப்படுகிறது. அதில், இன்ஸ்டாகிராம் முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளது. இன்ஸ்டாகிராமை முழு நேரம் பயன்படுத்துவோர் பல புகைப்படங்கள், பில்டர், முகத்தை நிறத்தை அதிகரிப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். இத்தகை கவர்ச்சி கலாச்சாரத்தின் ஆதிக்கம் சமூகத்தில் நச்சு கலந்த சூழலை  ஏற்படுத்துகிறது. ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் WSJ யிடம் “இன்ஸ்டாகிராம் ஒரு மருந்து போன்றது’. அதை ஆய்வு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.


உடல் உருவப் பிரச்சினைகளில் டீன் ஏஜ் பெண்களுக்கானது மட்டும் அல்ல. இளம்பெண்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்தாண்டு இங்கிலாந்து தேசிய சுகாதார மையம் இன்ஸடாகிராம் நிறுவனத்தைக் கடுமையாகச் சாடி பதிவிட்டிருந்தது.
சுகாதார மையம், இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, உடல் எடையை அதிகரிக்க உதவும் ‘Apetamin’மருந்தின் விளம்பரங்களை பதிவிடும் கணக்குகளை கண்டறிந்து தடை செய்ய வேண்டும். இந்த விளம்பரத்தை முழுமையாக நீக்கிட கோரியுள்ளது. ஏனென்றால், இந்த மருந்து பயன்படுத்தினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், இன்ஸ்டாகிராம் இந்த மருந்தை விற்கும் கணக்குகளை தான் நீக்க முடியும். விளம்பரம் செய்யும் கணக்குகளைக் கண்டறிவது கடினமான பணி என பதிலளித்துள்ளது.


இத்தகைய விளம்பரங்கள் மூலம் டீன் ஏஜ் பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் தளமாக இன்ஸ்டாகிராம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.




WhatsApp-ல் யுபிஐ பேமெண்ட்டுகளுக்கு கேஷ்பேக் வழங்க திட்டம்!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது UPI பேமெண்ட்ஸ் அம்சத்தை பயனர்களிடம் பிரபலப்படுத்த கேஷ்பேக் வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் UPI பேமெண்ட்களை பொறுத்தவரை ஏற்கனவே Google Pay, PhonePe, Paytm போன்ற நன்கு அறியப்பட்ட ஆப்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், தானும் இந்த பட்டியலில் சேர வாட்ஸ்அப் நிறுவனம் தனது UPI பேமெண்ட்ஸ் அம்சத்தை பயனர்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான மற்றும் உலகம் முழுவதும் பிரபல மெசேஜிங் App-ஆக இருந்து வரும் வாட்ஸ்அப்-பின் லேட்டஸ்ட் அம்சங்களில் ஒன்று தான் வாட்ஸ்அப் பேமண்ட்ஸ்.

இந்தியாவிலேயே கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப்பை மெசேஜிங் காரணங்களுக்காக பயன்படுத்தினாலும் கூட, இதன் பேமெண்ட்ஸ் ஆப்ஷனை யாரும் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. எனவே வாட்ஸ்அப் தனது பேமெண்ட்ஸ் அம்சத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் தனது பேமெண்ட்ஸ் அம்சத்தை மார்க்கெட்டிங் செய்ய, போட்டியாளரான கூகுளின் பேமெண்ட் சேவையான Google Pay-வை போலவே கேஷ்பேக் ஆஃபர்களை கொண்டு வரலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வாட்ஸ்அப் டிராக்கரான WABetaInfo-ன் தகவலின் படி, வாட்ஸ்அப் மூலம் செய்யப்படும் UPI பேமெண்ட்ஸ்களுக்கு, விரைவில் வாட்ஸ்அப் கேஷ்பேக் சலுகைகளை தர உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இந்த அம்சம் இன்னும் டெவலப்பிங் ஸ்டேஜில் உள்ளது மற்றும் பீட்டா டெஸ்டர்ஸுக்கு இது சென்றடைய இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

2018-ஆம் ஆண்டின் துவக்கத்தில் வாட்ஸ்அப் யுபிஐ அடிப்படையிலான பேமெண்ட்ஸ்களை அறிமுகப்படுத்தியது. எனினும் இந்த சேவை சில வருடங்கள் பீட்டா வெர்ஷனில் இருந்தது, அதே நேரத்தில் வாட்ஸ்அப் யுபிஐ சேவைகளை வழங்க தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றது.


இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு, அனைத்து யூஸர்களுக்கும் வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. என்றாலும் கோடிக்கணக்கான இந்திய யூஸர்களை கொண்ட வாட்ஸ்அப்-பின் இந்த புதிய அம்சம் நாட்டில் பெரியளவில் இன்னும் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் அடுத்தடுத்து வரும் வாட்ஸ்அப் வெர்ஷன் அப்டேட்களின் போது இந்த சலுகை அம்சம் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் WABetaInfo தகவல் தெரிவித்து, வரவிருக்கும் அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட்டயும் சோஷியல் மீடியா போஸ்ட்டில் சேர்த்துள்ளது. 





இன்ஸ்டா ட்விட்டரில் இருந்து வாட்ஸ் அப்க்கு வரும் சூப்பரான அம்சம்- எதிர்ப்பார்ப்பில் பயனாளர்கள்!

 

WhatsApp react option tamil news

வாட்ஸ் அப் நிறுவனமானது பயனாளர்கள் அடிக்கடி புது புது வசதியை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

இதனை வாட்ஸ் அப் அம்சங்களை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு குறுந்தகவல்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யலாம்.

இது பேஸ்புக் பதிவுகளுக்கு லைக் மற்றும் இதர எமோஜி மூலம் ரியாக்ட் செய்வதை போன்றே செயல்படும். இன்ஸ்டாகிராமில் ரியாக்ட் செய்ய, குறுந்தகவலை அழுத்திப்பிடித்து பாப்-அப் ஆகும் எமோஜியில் ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும்.

வாட்ஸ்அப் செயலியிலும் புதிய அம்சம் இதேபோன்றே வழங்கப்படும் என தெரிகிறது. 

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய வசதி: குஷியில் நடுத்தர மக்கள்...



இந்தியாவில் உள்ள சிறு,குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் பெற்று தரும் வசதியை தொடங்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு கடன்களை பெற்று தரும் திட்டத்தினை இந்தியாவில் (India) தான் முதன்முதலில் ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்ளது. மாநகரங்கள், நகரங்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு இந்த கடனுதவி கிடைக்கும்.

இதனை சிறு தொழில் கடன் நிறுவனமான “இண்டிஃபையுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலம் இண்டிஃபை நிறுவனத்தின் கடன் திட்டங்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்படும். இதன் மூலம் தொழில் தொடங்க விரும்புபவர்கள் எளிதாக கடன் பெறலாம்.

இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைத் தலைவர் அஜீத் மோகன் செய்தியாளர்க்களுக்கு காணொலி மூலமாக அளித்த பேட்டியில், ” ஃபேஸ்புக் மூலம் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் எளிதாக கடன் கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம்.எங்களுடன் இண்டிஃபை நிறுவனமும் இத்திட்டத்தின் வாயிலாக இணைந்துள்ளது.

இதற்கடுத்த கட்டமாக மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தினை தொடங்குவதன் மூலம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எந்த ஒரு வருவாயும் கிடைக்கப்போவதில்லை. ஃபேஸ்புக்கினை பயன்படுத்தி கடன் பெறுவதற்கு கட்டணம் ஏதும் நிறுவனம் வசூலிக்காது.

இந்த திட்டம் சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோரையும் , ஃபேஸ்புக் நிறுவனத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக இது இருக்கும்” என்று தெரிவித்தார். 

பெகாசஸ் ஸ்பைவேர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை !!!!

pure tamil tech

 பெகாசஸ் என்பது உளவுபார்க்கும் ஒரு  இரகசிய மென்பொருள்.இது  இஸ்ரேலை சேர்ந்த NSO இணைய பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ஸ்பைவேராகும்.வங்கதேசம்,மெக்சிகோ மற்றும்  சவுதி அரேபிய போன்ற பல  நாடுகள் NSO விடமிருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கி பயன்படுத்துகின்றனர். நாட்டின் பாதுகாப்பிற்காகவே இந்த மென்பொருளை வாங்குவதாக அரசு கூறினாலும் அது மக்களை உளவுபார்க்கவே பயன்படுத்தபடுகிறது என குற்றம் சாட்டபடுகிறது.இருப்பினும் இந்தியா இந்த மென்பொருளை வாங்கியதா இல்லையா என அதிகாரபூர்வாக தெரியவில்லை.

tamil tech news tamil

இது முதன்முதலில் 2016 ஆம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்தது.இந்த ஸ்பைவேர்  ஐபோன் பயனர்களை முதலில் குறிவைத்தது. பல நாட்களுக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் பெகாசஸ் பயன்படுத்தும் பாதுகாப்பு ஓட்டைகளை சரி செய்து அதன் லேட்டஸ்ட் iOS-ஐ வெளியிட்டது. அதன்பின் ஒரு வருடம் கழித்து,இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களையும் பாதிக்கும் திறன் கொண்டுள்ளது என்று பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பின்னர் 2019 ஆம் ஆண்டில், பெகாசஸை உருவாக்கியதற்காக NSO குழுமத்திற்கு எதிராக பேஸ்புக் வழக்கு பதிவு செய்தது.

ஒரு ஹேக்கர் முதலில்  ஹேக் செய்ய வேண்டிய  போனை அடையாளம் கண்டவுடன்,  தீங்கிழைக்கும் வலைத்தள இணைப்பை அனுப்புகிறார்கள், அதை குறிப்பிட்ட பயனர் கிளிக் செய்ததும் அவரின் போனில் பெகாசஸ் நிறுவப்படும்.இது வாட்ஸ்அப் காலில் உள்ள செக்யூரிட்டி பக்(security bug) வழியாகவும் நிறுப்படுகிறது.இதில் மிகவும் மோசமான முறை கால் மெத்தேட்.(call method) ஒரு குறிப்பிட்ட பயனருக்கு ஒரு மிஸ்டு காலை கொடுப்பதன்  மூலமும் இதை இன்ஸ்டால் செய்யலாம். குறிப்பிட்ட மென்பொருள் நிறுவப்பட்டதும், அது கால் லாக்-இல்(call lock) இருந்து குறிப்பிட்ட பதிவை நீக்கும், இதனால் குறிப்பிட்ட மிஸ்டு கால் குறித்தும்  பயனருக்குத் தெரியாது.

pure tamil tech news

பெகாசஸ் ஒரு ஸ்மார்ட்போனுக்கு வந்தவுடன்,பயனரை முழுமையாக உளவு பார்க்கும் . வாட்ஸ்அப் மூலம் செய்யப்பட்ட எண்ட் டூ எண்ட்(end to end) குறியாக்கம் செய்யப்பட்ட சாட்களை க்கூட பெகாசஸால் அணுக முடியும். மொபைலிருந்து மேசேஜ்,புகைப்படங்கள்,வீடியோக்கள் இருப்பிடத் தரவு மற்றும் மின்னஞ்சல் போன்ற அனைத்து தகவல்களையும் திருட முடியும்.மேலும் தொலைபேசி அழைப்புகளையும் ஒட்டு கேட்க முடியும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

மேலும் அதை கட்டுபடுத்துபவர்களுடன் 60 நாட்களுக்கு மேல் தொடர்புகொள்ள முடியவில்லையென்றலோ  அல்லது தவறான போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தலோ தானாகவே அழிந்து கொள்ளும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






ஆண்ட்ராய்டு போன்-களுக்கு சிறந்த VPN ஆப் எது?

 VPN ஆப் பற்றி இன்று அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இது பல்வேறு நோக்ககங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

என்றாலும் பிரதானமாக குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் அல்லது ஒரு நாட்டில் இணையத்தை பயன்படுத்தும் போது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கு இது பயன்படுத்தப்படுகின்றது.

இந்த VPN சேவையை பெற்றுக்கொள்ள கூகுள் பிளே ஸ்டோரில் ஏராளமான செயலிகள் இருக்கின்றன.

இருந்தாலும் அவற்றில் ஏராளமான ஆப்-கள் முறையாக இயங்குவதில்லை. எனவே உங்களுக்கு சிறந்த ஒரு VPN ஆப் ஐ நாம் கீழே வழங்கியுள்ளோம். இதனை பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்யவும் முடியும்.

vpn tamil news pure tamil tech

ஒரு சிறந்த VPN ஆப் ஐ பயன்படுத்துவதன் மூலம் உங்கள் நாட்டில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள ஆப், மற்றும் இணையதளங்கள் போன்றவற்றை எவ்வித தங்கு தடையும் இன்றி உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

                                                        எமது சேனலில் இணைக

நான் மேலே குறிப்பிட்டது போன்று இலவசமாக கிடைக்கக்கூடிய ஏராளமான VPN சேவைகள் முறையாக இயங்குவதில்லை. இருப்பினும் டனல் பீர் எனும் ஆப் ஆண்ட்ராய்டு போன்களில் சிறப்பாக இயங்குகிறது.

இந்த ஆப்-இல் 23 நாடுகளுக்கான VPN-கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு விரும்பிய எந்த ஒரு நாட்டை தெரிவு செய்தும் பிரௌசிங் செய்ய முடியும்.

இதனை பயன்படுத்தும் போது உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கான பாதுகாப்பு, இணைய வேகம் போன்ற அம்சங்கள் இதில் சிறப்பாக காணப்படுகின்றன.

இதனை நீங்கள் பயன்படுத்துவதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கி இலவச கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும். பின்னர் உங்களுக்கு மாதாந்தம் 500 எம்.பி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

மேலும் இலவசமாக வழங்கப்படும் மாதாந்த டேட்டாவை கட்டணம் செலுத்தாமல் பல்வேறு வழிகளில் அதிகரித்துக் கொள்ளவும் வழிகள் இதில் தரப்பட்டுள்ளன.

பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவாகவும் உள்ளது. இதனை ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ், மேக் போன்ற பல்வேறு சாதனங்களிலும் பயன்படுத்த முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நீங்களும் ஒருமுறை பயன்படுத்திதான் பாருங்களேன்.

டனல் பீர்


டாகுமெண்ட்-களை ஸ்கேன் செய்ய நம்பர் ஒன் ஆப் இது தான்.

 

tamil tech news

கோவிட் 19 கொள்ளை நோயால் இன்று அனைத்து தரப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இன்றைய நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி ஆசிரியர் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் தமது பாடங்கள், வினாத்தாள்களை வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் தமது மாணவர்களுக்கு வழங்கி கற்பித்து வருகின்றனர்.அதே நேரம் மாணவர்களும் தமது விடை பத்திரங்களை போட்டோ பிடித்து இணையத்தின் ஊடாகவே அனுப்பி வைக்கின்றனர்.

அடோபி ஸ்கேன்: மிகச்சிறந்த ஒரு ஸ்கேனிங் ஆப்

நான் மேலே குறிப்பிட்டது போன்ற சந்தர்ப்பங்களில் ஆசிரியர் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர்களுக்கும் உதவுகிறது அடோபி ஸ்கேன் எனும் ஆப்.

ஸ்கேனர் இயந்திரத்திற்கு நிகரான ஸ்கேனிங் வசதி:

இது உங்கள் பாட புத்தகங்கள், பயிற்சி கொப்பிகள், வினாத்தாள்கள், விடை பத்திரங்கள் போன்ற எந்த ஒரு டாகுமெண்ட்-ஐயும் மிகத் தெளிவாக போட்டோ பிடிக்க உதவுகின்றது.

டாகுமெண்ட்-களை பி.டி.எப் வடிவில் சேமிக்கக் கூடிய வசதி:

இந்த ஆப் மூலம் நீங்கள் பிடிக்கக்கூடிய டாகுமெண்ட்-களை இது பி.டி.எப் வடிவத்தில் சேமித்துக் கொள்ளவும் உதவுகிறது. (படிப்பதற்கும் பிரிண்ட் அவுட் செய்வதற்கும் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் மிக பொருத்தமான வடிவம் பி.டி.எப் (PDF) ஆகும்)

பல பக்கங்களை கொண்ட ஒரு பி.டி.எப் (PDF) பைல்:

மேலும் பக்கம் பக்கமாக இருக்கக்கூடிய நீண்ட புத்தகங்கள், டாகுமெண்ட்-கள் போன்றவற்றையும் கூட மிகக் குறுகிய நேரத்தில் போட்டோ பிடித்து ஒரு பி.டி.எப் (PDF) பைல் ஆக பெற்றுக் கொள்வதற்கான வசதியை இது கொண்டுள்ளது.

தெளிவற்ற போட்டோ-க்களையும் தெளிவாக மாற்றலாம்:

அத்துடன் நீங்கள் ஏற்கனவே உங்கள் மொபைல் போன் கேமரா மூலம் பிடித்த மங்கலான போட்டோ-க்களை கூட இந்த ஆப் இன் உதவியுடன் ஸ்கேன் செய்யப்பட்ட ஒரு டிஜிட்டல் ஆவணமாக மாற்றிக் கொள்ள முடியும்.

adobe scan tamil tech pure tamil tech

அடோபி ஸ்கேன்: பயன்படுத்துவது எப்படி?

  1. அடோபி ஸ்கேன் ஆப் ஐ திறக்க:

    இதனை ஆண்ட்ராய்டு போன்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் ஐபோன்-களுக்கு ஆப் ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


கேமரா மூலம் ஸ்கேன் செய்க:
  1. டாகுமெண்ட்-இற்கு முன்னாள் உங்கள் மொபைல் போனை நிலையாக வைத்து ஸ்கேன் செய்க.

  1. நான்கு மூலைகளையும் சரி செய்க.
ஸ்கேன் செய்யப்பட்ட டாகுமெண்ட்-இன் நான்கு முலைகளும்
அடோபி ஸ்கேன்ஆப் ஆல் கண்டறியப்பட்டு தெரிவு செய்யப்பட்டு
இருக்கும். இருப்பினும் அதில் குறைபாடுகள் இருந்தால் உங்களால்
அதனை சரி செய்துகொள்ள முடியும்.

  1. Adobe Scan, அடோபி ஸ்கேன்

படிமுறை 2, மற்றும் 3 ஐ பின்பற்றி அடுத்தடுத்த பக்கங்களை
ஸ்கேன் செய்க.
ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை கொண்ட டாகுமெண்ட் எனின்,
படிமுறை 2, மற்றும் 3 ஐ பின்பற்றி அனைத்து பக்கங்களையும் ஸ்கேன்
செய்து கொள்க.

Continue பட்டனை அழுத்துக.

ஸ்கேன் செய்து முடிந்தவுடன் Continue பட்டனை அழுத்துக.
பக்கங்களை சரிப்படுத்துக.

Continue பட்டனை அழுத்தியதை தொடர்ந்து ஸ்கேன் செய்யப்பட்ட
அனைத்து பக்கங்களும் தோன்றும். ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை
கொண்ட ஆவணம் எனின் அதன் பக்கங்களை ஒழுங்கு முறை
படுத்திக் கொள்க.

Save PDF பட்டனை அழுத்துங்க.
வலது மேல் மூலையில் வழங்கப்பட்டுள்ள Save PDF பட்டனை
அழுத்துவதன் மூலம் நீங்கள் ஸ்கேன் செய்த டாகுமெண்ட் ஐ பி.டி.எப்
(PDF) பைல் ஆக மாற்றிக் கொள்ள முடியும்.
  1. app to scan documents

இனி அதனை சேவ்/ஷேர் செய்ய முடியும்.

நீங்கள் ஸ்கேன் செய்த டாகுமெண்ட் ஐ உங்கள் போனில் சேமித்துக்
கொள்ளவோ அல்லது வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சேவைகள் மூலம்
ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ முடியும்.


Mobile scanning app
குறிப்பு:

இந்த ஆப் ஐ பயன்படுத்துவதற்கு உங்கள் மின்னஞ்சல் (E-mail)

முகவரியை பயன்படுத்தி அல்லது பேஸ்புக், கூகுள் கணக்கை

பயன்படுத்தி இலவச அடோபி அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி

உள்நுழைய வேண்டும்.

இறுதிக் கருத்து:

இந்த செயற்பாட்டை மேற்கொள்வதற்கு மைக்ரோசாப்ட் லென்ஸ், கெம் ஸ்கேனர் போன்ற இன்னும் பல செயலிகளும் உள்ளன.

இருப்பினும் எனது அனுபவத்தின் அடிப்படையில் அவற்றை விட இந்த

ஆப் பயன்படுத்துவதற்கு இலகுவானதாகவும் சிறந்த வசதிகளை

தரக்கூடியதாகவும் உள்ளது.

எனவே ஒரு ஸ்கேனர் இயந்திரத்தின் உதவியின்றி ஒரு ஆவணத்தை

அப்படியே ஸ்கேன் செய்தது போல் பெற்றுக்கொள்ள இந்த இலவச

ஆப் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.




கூகுள் ஆப் இல் மறைந்துள்ள மற்றுமொரு புதிய வசதி

ஐபோன்-களில் வழங்கப்பட்டுள்ள “சிறி” வசதியை போன்று ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் அசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.


இவற்றின் மூலம் ஏராளமான பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தற்பொழுது தமிழ் உட்பட எந்த ஒரு மொழியில் இருக்கும் இணையதளங்களையும் மிகவும் தெளிவான தொனியில் வாசித்தும் காட்டுகின்றது இந்த கூகுள் அசிஸ்டன்ட் இன் புதிய வசதி.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் போனில் இருக்கும் கூகுள் ஆப்-ஐ புதுப்பித்துக் கொள்வது மாத்திரமே. அல்லது  பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

கூகுள் அசிஸ்டன்ட் இணையதளங்களை வாசிக்க என்ன செய்ய வேண்டும்.

அவ்வளவு தான். இனி குறிப்பிட்ட இணையதளத்தை கூகுள் அசிஸ்டன்ட் வாசிக்கத் துவங்கும்.


ட்ரூகாலரில் செடியூல் எஸ்.எம்.எஸ் செய்வது எப்படி?

 தெரியாத இலக்கங்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களை இனங்கண்டு அழைப்பவரின் பெயரை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும் ட்ரூகாலர் ஆப் பற்றி நீங்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.

ஆரம்பத்தில் ட்ரூகாலர் தனியாகவும் ட்ரூமெசேஞ்சர் தனியாகவும் அதாவது வெவ்வேறு ஆப்-கள் ஆக வழங்கப்பட்டது.

ட்ரூமெசேஞ்சர் என்பது எமது போனுக்கு வரக்கூடிய எஸ்.எம்.எஸ் களை மிகவும் திறமையாக நிறுவகிக்கும் ஒரு ஆப் ஆகும்.

எனினும் காலப்போக்கில் ட்ரூகாலர் செயலியுடன் ட்ரூமெசேஞ்சர் செயலி (ஆப்) இணைக்கப்பட்டது. 

எஸ்.எம்.எஸ் செடியூல் வசதி

விடயம் என்னவெனில் ட்ரூகாலர்-இன் அண்மைய வெளியீட்டில் ஒரு அருமையான வசதி பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது நீங்கள் பிறகொரு சந்தர்ப்பத்தில் அனுப்ப வேண்டிய எஸ்.எம்.எஸ் ஒன்றை தற்பொழுது செடியூல் செய்வதற்கான வசதி அதுவாகும்.

இந்த வசதி மூலம் குறிப்பிட்ட ஒரு நாளில் சரியான ஒரு நேரத்தில் உங்கள் உறவினர் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவதற்கு, அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு, ஞாபகமூட்டுவதற்கு என பல்வேறு பயன்களை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

ட்ரூகாலரில் எஸ்.எம்.எஸ் செடியூல் செய்வது எப்படி?

  1. முதலில் ட்ரூகாலர் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்க.

  2. பின்னர் ட்ரூகாலர்-ஆப் ஐ திறந்து வலது கீழ் மூலையில் வழங்கப்பட்டுள்ள “+” பட்டனை அழுத்துக.

    நீங்கள் முதன் முதலாக ட்ரூகாலர் ஆப்-ஐ பயன்படுத்துபவர் எனின் உங்கள் மொபைல் இலக்கத்தை வழங்கி இலவச கணக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

3. இனி எஸ்.எம் எஸ் செய்ய வேண்டிய தொலைபேசி எண்ணை சேர்ச் பாரில் உள்ளிட்டு அம்புக்குறி பட்டனை அழுத்துக.

அல்லது உங்கள் போனில் சேமிக்கப்பட்டுள்ள நண்பரின் பெயரை சேர்ச் பாரில் உள்ளிட்டு அந்த காண்டாக்ட்-ஐ அழுத்துவதன் மூலம் எஸ்.எம் எஸ் செய்யும் பகுதிக்கு செல்க.

pure tamil tech news

4. பின் செடியூல் செய்ய வேண்டிய எஸ்.எம்.எஸ் ஐ டைப் செய்த பின்னர் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள “SMS” பட்டனை தொடர்ச்சியாக சிறிது நேரத்திற்கு அழுத்துக.

இதன் போது செடியூல் செய்வதற்கான பட்டன் தோன்றும்.


5. இறுதியாக செடியூல் பட்டனை அழுத்தி நீங்கள் டைப் செய்த குறுஞ்செய்தி அனுப்பப்பட வேண்டிய நாள் மற்றும் நேரத்தை தெரிவு செய்து “SCHEDULE SMS” என்பதை அழுத்திவிடுக.

அவ்வளவுதான்! இனி நீங்கள் செடியூல் செய்த குறுஞ்செய்தி குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் உங்களை அறியாமலேயே அனுப்பப்பட்டுவிடும்.






கூகுள் குரோம் பிரௌசரில் மறைந்துள்ள புதிய வசதி! (Sneak Peek)

 


இன்று இன்டர்நெட் பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அதிலும் மொபைல் போன் மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்களே இன்று அதிகம். அவ்வாறு இணையத்தை பயன்படுத்துபவர்களில் ஆண்ட்ராய்டு போன் மூலம் குரோம் இணைய உலாவியை பயன்படுத்துபவர்கள் ஏராளாம்.

கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்துவதற்கு இலகுவானதும் ஏராளமான வசதிகளை தரக்கூடியதும் ஆகும்.

இதில் நீங்கள் இதுவரை அறிந்திராத புதியதொரு பயனுள்ள வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அந்த புதிய வசதியை பெற்றுக்கொள்ள நாம் இங்கே வழங்கியுள்ள குரோம் பீட்டா பதிப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ஆண்ட்ராய்டு குரோம் பிரவுசரில் புதியதொரு வசதி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு அந்த வசதி பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு சோதனை படுத்தப்படுகின்றது.

அவ்வாறானதொரு Sneak-Peek எனும் வசதியே இதுவாகும்.

இந்த வசதியை நீங்கள் செயற்படுத்திக் கொண்டதன் பின்னர் இணையதளங்களில் இணைக்கப்பட்டுள்ள இன்னுமொரு இணையப் பக்கத்தை குறிப்பிட்ட இணையத்தளத்தில் இருந்தே பார்க்க முடியும்.



அதாவது நீங்கள் இந்த பதிவை வாசிக்கும்போது நான் இங்கே இன்னும் ஒரு பதிவிற்கான இணைப்பை வழங்கி இருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அதனை க்ளிக் செய்தால் அது புதியதொரு தாவலில் (Tab) திறக்கும் அல்லவா? அனால் Sneak-Peek வசதியை செயற்படுத்துவதன் மூலம் இந்த பதிவை விட்டுச்செல்லாமல் இதற்கு மேலால் மற்றைய இணைப்பை திறந்து கொள்ளலாம். ( மேலே வழங்கப்பட்டுள்ள படத்தை அவதானிப்பதன் மூலம் இதனை விளங்கிக் கொள்ளலாம்)


யூடியூப்-ஆப் இல் வழங்கப்பட்டுள்ள அருமையான ஒரு புதிய வசதி!

 

youtube tamil news

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் இணையத்தளம் உலகளாவிய ரீதியில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு நாளும் இதில் சுமார் ஒரு பில்லியன் மணித்தியாலங்களுக்கு சமனான வீடியோ கோப்புக்கள் பார்க்கப்படுகின்றன.

நாமும் எமது ஸ்மார்ட்போன் மூலம் யூடியூப் ஆப் ஐ அடிக்கடி பயன்படுத்துகிறோம் அல்லவா? தற்பொழுது இந்த யூடியூப் ஆப்-இன் புதிய பதிப்பில் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு வசதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது நீங்கள் யூடியூப் ஆப் மூலம் பார்க்கும் வீடியோ ஒன்றை ஸ்வைப் ஜெஸ்ச்சர் (Gesture) மூலம் ஃபுல் ஸ்க்ரீன் மூட்-இற்கு மாற்றிக் கொள்ள முடியும். இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி உங்கள் யூடியூப்-ஆப் ஐ புதிய பதிப்பிற்கு மாற்றிக்கொள்க.

  1. முதலில் நீங்கள் யூடியூப் ஆப்-ஐ புதிய பதிப்பிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

  2. இனி நீங்கள் யூடியூப் மூலம் வீடியோ ஒன்றை பார்க்கும் சந்தர்ப்பத்தில் அதன் மேல் கீழிருந்து மேலாக உங்கள் விரல்களால் ஸ்வைப் செய்க.

  3. இனி குறிப்பிட்ட காணொளியை உடனடியாக ஃபுல் ஸ்க்ரீன் மூட்-இல் கண்டுகளிக்கலாம்.
youtube giff

ஃபுல் ஸ்க்ரீன் மூட் ஐகானை அலுத்துவதற்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்வைப் ஜெஸ்ச்சர் வசதி நிச்சயம் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதாக அமையும்.

குறிப்பு: யூடியூப் ஆப்-ஐ புதிய பதிப்பிற்கு மாற்றிக்கொண்ட பின்னரும் உங்களுக்கு இந்த வசதி கிடைக்கவில்லை எனின், நீங்கள் சற்று பொறுத்திருக்க வேண்டும். காலக்கிரமத்தில் உங்களுக்கு மேற்குறிப்பிட்ட வசதி கிடைத்துவிடும்.