கூகுள் மொழிபெயர்ப்பு என்பது சிறந்த மொழிபெயர்ப்பு பயன்பாடுகளில் ஒன்றாகும். ஆப்பிளின் புதிய மொழிபெயர்ப்பு பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் கூட,கூகுள் சிறந்த மொழிபெயர்ப்பு பயன்பாடாக உள்ளது.இதிலுள்ள மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்று, இது நிகழ்நேரத்தில் உரையாடல்களை நடத்துவதற்கும் அவற்றை உங்கள் தொலைபேசியில் மொழிபெயர்ப்பதற்கும் உதவும்.
உங்கள் தொலைபேசியில் நிகழ்நேர மொழிபெயர்ப்புகளின் இந்த டிரான்ஸ்கிரிப்ட்களை சேமிக்க அனுமதிக்கும் என்று நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. நீங்கள் உரையை எழுதும்போது திரையின் மேல் வலது மூலையில் ஒரு நட்சத்திர பொத்தானைக் காண்பீர்கள். இந்த பொத்தானைத் தட்டினால், உங்கள் தொலைபேசியில் டிரான்ஸ்கிரிப்டுகள் சேமிக்கப்படும். பக்கத்திலுள்ள sidebar இருந்து இவற்றை அணுகலாம்.
Update: You can now save your transcript of a transcribe session in the Google Translate app on @Android. Plus, translation is now available in Italian. 🇮🇹 https://t.co/HKY2ZvVpN6 pic.twitter.com/kXFUB5PHex
— Google (@Google) August 20, 2020
கூகுளின் இந்த டிரான்ஸ்கிரிப்ட் அம்சம் இப்போது ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், தாய், இத்தாலியன், ரஷ்யன் மற்றும் போர்த்துகீசியம் என ஒன்பது மொழிகளில் செயல்படுகிறது.
XDA டெவலப்பர்களின் கூற்றுப்படி, மே மாதத்தில் இந்த அம்சம் டெவலப்-ன் கீழ் காணப்பட்டது.
ஆனால் இது சேவையக பக்கம்
(server side ) இருப்பதால்,அனைவருக்கும் காண்பிக்கப்படாமல் போகலாம்.
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பிளே ஸ்டோரில் கிடைக்கும் கூகுள் மொழிபெயர்ப்பிற்கான சமீபத்திய பதிப்பை புதுப்பிதன் மூலம் உங்களுக்கு கிடைக்கலாம்.
நீங்கள் இந்த டிரான்ஸ்கிரிப்ட் அம்சத்தை பயன்படுத்துவீர்களா ? இது பயனுள்ள அம்சம் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கருத்துக்களை ஷேர் செய்யுங்கள்…..
என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 comments:
கருத்துரையிடுக