இளைஞர்களின் மனம் கவரும் PUBG, FREE FIRE விளையாட்டும்..விபரீதமும்..

இந்த கால கட்டத்தில் கைபேசி (Smart Phone ) அனைவரிடமும் இருக்கின்றது.குழந்தைகள் முதல் பெரியவர் வரை தற்பொழுது திரை பேசி உபயோகிக்கின்றார்கள் .

நாம் வெகுதொலைதூர பயணம் செய்யும் பொழுது கைபேசி யானது நமக்கும் மிகவும் முக்கியமான பொழுது போக்கு அம்சம் நிறைந்த ஒன்றாக தேவைப்படுகின்றது. அந்த சமயங்களில் பெரும்பாலோனோர் விளையாட்டுகளை விளையாடி மகிழ்வர்.

அப்படி வெகு இளைஞர்களை தன்வசபடுத்திய விளையாட்டுகளில் முக்கியமானவை 

PUBG மற்றும் FREE FIRE .

 


 இப்பொழுது இந்த விளையாட்டுகளை பற்றி பார்ப்போம்

இரண்டு விளையாட்டுகளும் ஒரே மாதிரிதான் ஆன்லைனில் மட்டும் விளையாட முடியும். இரண்டு விளையாட்டுகளிலும் நீங்கள் ஒரு தீவில் இறக்கி விடப்படுவீர். அந்த தீவில் உங்களுடன் 99 நபர்கள் இறக்கி விட படுவர்.

 

நீங்கள் அங்கு இறங்கிய உடன் அங்கு வீடுகள் இருக்கும் அங்கு சென்று பார்த்தால் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் சில ஆயுதங்கள் இருக்கும்.

அந்த ஆயுதங்களை வைத்து உங்களுடன் இறங்கிய நபர்களை தாக்க வேண்டும்.யார் கடைசிவரை உயிர் இழக்காமல் இருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவர்.இரண்டு விளையாட்டுகளிலும் சிறிது அளவு மாற்றம் காணப்படும்.Freefire பொறுத்தவரையில் 50 நபர்கள் இறக்கிவிடப்படுவர் ஆனால் PUBG யில் 100 நபர்கள் இறக்கிவிட படுவர்.சிறிது மாற்றங்களுடன் இருந்தாலும் இரண்டு விளையாட்டுகளுக்கு சரி சமமான அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் இந்த விளையாட்டுகளால் சில விபரிதங்களும் இருக்கின்றது.

ஆம் நண்பர்களே இது போன்ற விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாடும் போது வன்முறை எண்ணங்கள் அதிகரிக்கின்றது.

பல பெற்றோர்கள் இந்த விளையாட்டை எதிர்க்கின்றனர்.இந்த விளையாட்டிற்குச் சென்று விட்டால் எந்த வேலையும் செய்ய தோனாது.இந்த விளையாட்டால் மூளைச்சலவை செய்யப்பட்ட நபர் நமது நண்பர்கள் குழுவில் ஒருவராவது இருப்பார்.

இந்த விளையாட்டிற்கு அடிமையாக பல இளைஞர்கள் அனைத்து நாடுகளிலும் உள்ளனர். சில மனநல மருத்துவர்கள் இந்த விளையாட்டை அதிகமாக விளையாடினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறுகின்றனர்.

 உங்களை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை ஒதுக்கப்பட்ட நேரங்களில் மட்டும் விளையாடுங்கள் நேரம் ஒதுக்கி விளையாடாதீர்கள்.

விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் நண்பர்களே..

கல்வி,  தொழில்நுட்பம்

என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

 

0 comments:

கருத்துரையிடுக