கூகுள்
நிறுவனத்தின் சிறந்த தயாரிப்புக்களில் கூகுள் லென்ஸ்-உம் சிறந்த ஒன்றாகும். இது
பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படுகின்றது.
என்றாலும்
இன்று இணையம் மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் இது சிறந்த ஒன்றாக
விளங்குகிறது. இதனை நீங்கள் பயன்படுத்தும் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்ட்டு ஸ்மார்ட்
போன்களில் நிறுவிக்
கொள்ள முடியும்.
இதில்
வழங்கப்பட்டுள்ள “Text” மற்றும்
“Home Work” எனும்
இரு வசதிகளை பயன்படுத்தி இணையத்தின் மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சிறந்த
பயன்களை பெற்றுக் கொள்ள முடியும்.
டெக்ஸ்ட் (TEXT)
கூகுள்
லென்ஸ் செயலியில் வழங்கப்பட்டுள்ள “Text” எனும் ஆப்ஷனை தெரிவு செய்துவிட்டு ஒரு பௌதீக ஆவணத்தில் இருக்கக் கூடிய
எழுத்துக்களை ஸ்கேன் செய்ய முடியும். அவ்வாறு ஸ்கேன் செய்யப்பட்ட எழுத்துக்கள்
உடனுக்குடன் டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றப்படும்.
கூகுள் லென்ஸ் – ஹோம் ஒர்க் (Home work)
கூகுள் லென்ஸ்-இல் வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு பயனுள்ள அம்சம்
இதுவாகும். மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் சந்தேகங்கள் ஏற்படும்போது
குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அவர்கள் சுயமாகவே கற்று ஒரு தெளிவை பெற்றுக்
கொள்வதற்கான வழியை கூகுள் லென்ஸ்-இல் உள்ள இந்த Home Work ஹோம்
ஒர்க் எனும் ஆப்ஷன் வழங்குகிறது.
உதாரணத்திற்கு ஒரு கணித சமன்பாடு ஒன்றை தீர்ப்பதில் உங்களுக்கு
சிக்கல்கள் இருந்தால் கூகுள் லென்ஸ்-ஐ திறந்து Home work என்பதை
தெரிவு செய்து குறிப்பிட்ட சமன்பாட்டை ஸ்கேன் செய்யலாம். இதன் போது குறிப்பிட்ட
சமன்பாட்டுக்கான தீர்வை படிமுறை விளக்கங்களுடன் காண முடியும்.
இவ்வாறு கணிதம் மாத்திரம்
இன்றி என எந்த ஒரு பாடத்திற்குமான சந்தேகங்களை இந்த கூகுள் லென்ஸ்-இன் துணையுடன்
தெளிவு பெற்றுக்கொள்ள முடியும். கூகுள் லென்ஸ்-இற்கு மொழி ஒரு பிரச்சினை
அல்ல. எமது தமிழ் மொழியில் உள்ள வினாக்களுக்கு கூட நம்பகரமான தளங்களில் இருந்து
தகவல்களை பெற்று தருகிறது.
என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 comments:
கருத்துரையிடுக