பொதுவாக ஒரு போனிலிருந்து வேறொரு போனுக்கு வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது கணக்கை மாற்றும் போது பழைய போனிலிருந்து போட்டோ,
வீடியோ மாதிரியான மீடியாக்களை மாற்றுவது சவாலான காரியமாக இருக்கும்.
அதிலும் அந்த போன் ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டாக இருந்தால்
அதை மாற்றுவது முடியாத காரியமாக இருக்கும். இதனிடையே,
தான் வாட்ஸ்அப் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
அதன் மூலம் iOS-லிருந்து ஆண்ட்ராய்ட் போன்களுக்கு
எளிதில் மீடியாக்களை பகிர்ந்து
கொள்ள முடியும். அதற்காக பிரத்யேக டூல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப்.
இந்த வசதியை சாம்சங் ஃபோல்டபிள் போன் பயன்படுத்துகின்ற பயனர்கள் மட்டுமே செய்ய முடியும்.
அடுத்தடுத்த நாட்களில்
சாம்சங் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்ட்
10 இயங்குதளம் கொண்டவர்களுக்கும்
இந்த வசதி அறிமுகமாகும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
USB கேபிள் துணையுடன் சேட் (Chats), மீடியா மற்றும் ஹிஸ்டரிகளை ஐபோனிலிருந்து, ஆண்ட்ராய்டுக்கு மாற்றிக் கொள்ளலாம் என
தொழில்நுட்பம் சார்ந்த செய்திகள் வெளியிட்டு வரும் The Verge தெரிவித்துள்ளது.
சாம்சங் தவிர மற்ற ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட போன்களுக்கு இந்த வசதி எப்போது
அறிமுகமாகும் என்பது சஸ்பென்ஸாக உள்ளது.
என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 comments:
கருத்துரையிடுக