வீட்டில் இருந்தவாறே உங்கள் டயலொக் மொபைலுக்கு ரீலோடு செய்வது எப்படி?

tamil tech news

வீட்டிலிருந்து வெளியே செல்வதை முடியுமான அளவு குறைத்துள்ள நாம் எமது டயலாக் ஸ்மார்ட்போன்-இற்கு வீட்டில் இருந்தவாறு ரீலோடு செய்வது எப்படி என பார்ப்போம்.

இவ்வாறு ரீலோட் செய்வதற்கு டயலொக் வழங்கும் My Dialog ஆப் ஐ பயன்படுத்தலாம். அல்லது டயலாக் நிறுவனத்தின் ஜெனி ஆப்-ஐ பயன்படுத்தலாம். இதில் My Dialog ஆப்-ஐ அதிகமானவர்கள் பயன்படுத்தி வருவதால் இங்கு நாம் My Dialog ஆப் ஐ பயன்படுத்தி ரீலோடு செய்வது எப்படி என பார்ப்போம்.

  1. முதலில் My Dialog ஆப் ஐ டவுன்லோடு செய்து கொள்க.

நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் எனின் இந்த இணைப்பையும், ஐபோன் பயன்படுத்துபவர் எனின் இந்த இணைப்பையும், ஹூவாய் புதிய ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் எனின் இந்த இணைப்பையும் பயன்படுத்தி My Dialog ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்க.

  1. பின்னர் நீங்கள் நிறுவிய My Dialog ஆப்-ஐ திறந்து உங்களது மொபைல் இலக்கம், அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றை உள்ளிட்டு My Dialog ஆப்-இல் உள்நுழைந்து கொள்க.
  1. இனி உங்கள் மொபைல் இலக்கம், அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றை உள்ளிட்டு My Dialog-ஆப்-இல் உள்நுழைந்து கொள்க.
my dialog app tamil news
  1. பின் My Dialog-ஆப் இல் “Reload” பட்டனை அழுத்துக. (படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு)
  1. பின்னர் உங்கள் இலக்கத்திற்கு அருகில் ரீலோட் செய்ய வேண்டிய தொகையை உள்ளிடுக.
how to reload from my dialog app iin tamil
ஆப்-இன் கீழ் பகுதியில் கட்டணம் செலுத்துவதற்கான முறையை தெரிவு செய்ய முடியும். கட்டணம் செலுத்துவதற்கு விசா, மாஸ்டர், அமெக்ஸ், Star points அல்லது eZ Cash போன்ற நிதி மூலங்களை பயன்படுத்தலாம்.
how to reload from my dialog app tamil
  1. விசா அல்லது மாஸ்டர் அல்லது கார்ட் போன்ற நிதி மூலத்தை பயன்படுத்தி ரீலோட் செய்ய விரும்பினால் Payments Methods என்பதற்கு கீழ் வழங்கப்பட்டுள்ள Visa/Master என்பதை தெரிவு செய்து “Pay” என்பதை அழுத்துக.
  1. பின் உங்களது விசா/மாஸ்டர் அட்டையின் விபரங்களை உள்ளிடுவதற்கான பகுதி தோன்றும். அதில் Card Type என்பதற்கு அருகில் Visa மற்றும் Master என வழங்கப்பட்டிருக்கும். உங்கள் கார்ட் எவ்வகையானதோ அதனை தெரிவு செய்து கொள்க.
  1. பின்னர் Card Number என்பதில் உங்களது வங்கி அட்டையின் முன் பகுதியில் வழங்கப்பட்டுள்ள 12 இலக்கங்களை கொண்ட எண் தொடரை உள்ளிடுக.
  2. பின்னர் Expiration Month, Expiration Year என்பவற்றுக்கு அருகில் முறையே உங்கள் காலாவதியாகும் மாதம் மற்றும் காலாவதியாகும் ஆண்டு வழங்கப்படல் வேண்டும். (காலாவதியாகும் ஆண்டு மற்றும் மாதம் என்பன உங்கள் வங்கி அட்டையில் வழங்கப்பட்டிருக்கும், அதனை உள்ளிடுக)
  3. visa card pure tamil tech
    1. இறுதியாக CVN எனும் பகுதியில் உங்கள் வங்கி அட்டையின் பின்புறம் வழங்கப்பட்டுள்ள மூன்று இலக்கங்களை கொண்ட இலக்கத்தை உள்ளிடல் வேண்டும்.
    1. மேற்குறிப்பிட்ட அனைத்து தகவல்களையும் பிழையின்றி உள்ளிட்ட பின்னர் “Pay” பட்டனை அழுத்துக.

    இனி உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து நீங்கள் உள்ளிட்ட தொகை அறவிடப்பட்டு அது உங்கள் Dialog மொபைலுக்கு ரீசார்ஜ் செய்யப்படும்.

    இந்த நடவடிக்கைக்கு எவ்வித மேலதிக கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

    சில சந்தர்ப்பங்களில் உங்கள் வங்கி அட்டையில் இருந்து பணம் அறவிட முடியாதுள்ளது என்ற பிழைச்செய்தி தோன்றலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட அட்டையில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இணையத்தின் மூலம் பணம் செலுத்துவதற்கான வசதியை உங்கள் வங்கி அட்டைக்கு செயற்படுத்துமாறு கூறவும். பின்னர் உங்களால் மேற்குறிப்பிட்ட நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்.

    Amex கார்ட் வைத்திருப்பவர்கள் 6 வது படிமுறையில் Payments Methods என்பதற்கு கீழ் Amex என்பதை தெரிவு செய்துவிட்டு ஏனைய கீழே வழங்கப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றவும்.

    அத்துடன் மேற்குறிப்பிட்ட நிதி மூலங்கள் தவிர்ந்த Star Points மற்றும் eZ Cash போன்ற நிதி மூலங்களை பயன்படுத்தியும் உங்கள் Dialog Mobile இற்கு Recharge செய்துகொள்ள முடியும். இது தொடர்பில் நாம் அடுத்துவரும் பதிவுகளில் பார்ப்போம் அல்லது எமது Facebook பக்கத்தின் ஊடாக உங்கள் சந்தேகங்களை வினவலாம்.










 

0 comments:

கருத்துரையிடுக