கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் இணையத்தளம் உலகளாவிய ரீதியில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.
அத்துடன் ஒவ்வொரு நாளும் இதில் சுமார் ஒரு பில்லியன் மணித்தியாலங்களுக்கு சமனான வீடியோ கோப்புக்கள் பார்க்கப்படுகின்றன.
நாமும் எமது ஸ்மார்ட்போன் மூலம் யூடியூப் ஆப் ஐ அடிக்கடி பயன்படுத்துகிறோம் அல்லவா? தற்பொழுது இந்த யூடியூப் ஆப்-இன் புதிய பதிப்பில் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு வசதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் யூடியூப் ஆப் மூலம் பார்க்கும் வீடியோ ஒன்றை ஸ்வைப் ஜெஸ்ச்சர் (Gesture) மூலம் ஃபுல் ஸ்க்ரீன் மூட்-இற்கு மாற்றிக் கொள்ள முடியும். இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி உங்கள் யூடியூப்-ஆப் ஐ புதிய பதிப்பிற்கு மாற்றிக்கொள்க.
- முதலில் நீங்கள் யூடியூப் ஆப்-ஐ புதிய பதிப்பிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
- இனி நீங்கள் யூடியூப் மூலம் வீடியோ ஒன்றை பார்க்கும் சந்தர்ப்பத்தில் அதன் மேல் கீழிருந்து மேலாக உங்கள் விரல்களால் ஸ்வைப் செய்க.
- இனி குறிப்பிட்ட காணொளியை உடனடியாக ஃபுல் ஸ்க்ரீன் மூட்-இல் கண்டுகளிக்கலாம்.
ஃபுல் ஸ்க்ரீன் மூட் ஐகானை அலுத்துவதற்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்வைப் ஜெஸ்ச்சர் வசதி நிச்சயம் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதாக அமையும்.
குறிப்பு: யூடியூப் ஆப்-ஐ புதிய பதிப்பிற்கு மாற்றிக்கொண்ட பின்னரும் உங்களுக்கு இந்த வசதி கிடைக்கவில்லை எனின், நீங்கள் சற்று பொறுத்திருக்க வேண்டும். காலக்கிரமத்தில் உங்களுக்கு மேற்குறிப்பிட்ட வசதி கிடைத்துவிடும்.
0 comments:
கருத்துரையிடுக