பல்வேறு தேவைகளுக்காக நாம் இன்று ஸ்மார்ட்பேசிகளிலும், கணனிகளிலும் PDF கோப்புக்களை பயன்படுத்துகின்றோம்.
இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட கோப்புக்களை ஒரே கோப்பாக இணைக்க வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும் எது எளிமையான முறை என்பதனை பார்க்கப்போகின்றோம்.
PDF மென்பொருளை அறிமுகம் செய்த அடோப் நிறுவனமே இந்தற்கான தீர்வினை வழங்குகின்றது.
ஆன்லைனிலேயே மிகவும் எளிதாக பீ.டி.எப் கோப்புக்களை ஒன்றிணைக்க முடியும்.
Adobe's free online tool to combine PDFs என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் மிகவும் சுலபமாக பல கோப்புக்களை ஒன்றிணைக்க முடியும்.
உதாரணமாக PDF வடிவில் உங்களிடம் காணப்படும் ஒரு தொகுதி படங்கள் அல்லது ஆவணங்களை ஒன்றிணைந்து ஓரு கோப்பாக உருவாக்க வேண்டுமாயின் இந்த லிங்கை அழுத்தி இலகுவில் உங்களது தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
Select Files ஐ அழுத்தி தேவையான கோப்புக்களை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
தேவையான அனைத்து கோப்புக்களையும் அப்லோட் செய்ததன் பின்னர் Merge/Combine Files என்பதனை அழுத்தி இந்த கோப்புக்களை ஒன்றிணைக்க முடியும்.
இவ்வாறு ஒரே கோப்பாக (File) ஒன்றிணைப்பதுடன் அதன் பக்கங்களை ஒழுங்கமைக்கவும், திருத்தங்களை செய்யவும், JPEG மற்றும் Word போன்ற வேறு ஓர் கோப்பு வடிவத்தில் மீள கோப்பினை சேமிக்கவும் முடியும்.
0 comments:
கருத்துரையிடுக