ஐபோன்-களில் வழங்கப்பட்டுள்ள “சிறி” வசதியை போன்று ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் அசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
இவற்றின் மூலம் ஏராளமான பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தற்பொழுது தமிழ் உட்பட எந்த ஒரு மொழியில் இருக்கும் இணையதளங்களையும் மிகவும் தெளிவான தொனியில் வாசித்தும் காட்டுகின்றது இந்த கூகுள் அசிஸ்டன்ட் இன் புதிய வசதி.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் போனில் இருக்கும் கூகுள் ஆப்-ஐ புதுப்பித்துக் கொள்வது மாத்திரமே. அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
கூகுள் அசிஸ்டன்ட் இணையதளங்களை வாசிக்க என்ன செய்ய வேண்டும்.
- கூகுள் அசிஸ்டன்ட் இன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்க.
- கூகுள் அசிஸ்டன்ட் வாசிக்க வேண்டிய இணைய தளத்திற்கு பிரவேசிக்குக.
- இனி OK Google அல்லது Hey Google என கூறுவதன் மூலம் உங்கள் கூகுள் அசிஸ்டன்ட் ஐ வரவழைத்து Read it அல்லது Read it loud எனக் கூறுக.
அவ்வளவு தான். இனி குறிப்பிட்ட இணையதளத்தை கூகுள் அசிஸ்டன்ட் வாசிக்கத் துவங்கும்.
0 comments:
கருத்துரையிடுக