ட்ரூகாலரில் செடியூல் எஸ்.எம்.எஸ் செய்வது எப்படி?

 தெரியாத இலக்கங்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களை இனங்கண்டு அழைப்பவரின் பெயரை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும் ட்ரூகாலர் ஆப் பற்றி நீங்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.

ஆரம்பத்தில் ட்ரூகாலர் தனியாகவும் ட்ரூமெசேஞ்சர் தனியாகவும் அதாவது வெவ்வேறு ஆப்-கள் ஆக வழங்கப்பட்டது.

ட்ரூமெசேஞ்சர் என்பது எமது போனுக்கு வரக்கூடிய எஸ்.எம்.எஸ் களை மிகவும் திறமையாக நிறுவகிக்கும் ஒரு ஆப் ஆகும்.

எனினும் காலப்போக்கில் ட்ரூகாலர் செயலியுடன் ட்ரூமெசேஞ்சர் செயலி (ஆப்) இணைக்கப்பட்டது. 

எஸ்.எம்.எஸ் செடியூல் வசதி

விடயம் என்னவெனில் ட்ரூகாலர்-இன் அண்மைய வெளியீட்டில் ஒரு அருமையான வசதி பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது நீங்கள் பிறகொரு சந்தர்ப்பத்தில் அனுப்ப வேண்டிய எஸ்.எம்.எஸ் ஒன்றை தற்பொழுது செடியூல் செய்வதற்கான வசதி அதுவாகும்.

இந்த வசதி மூலம் குறிப்பிட்ட ஒரு நாளில் சரியான ஒரு நேரத்தில் உங்கள் உறவினர் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவதற்கு, அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு, ஞாபகமூட்டுவதற்கு என பல்வேறு பயன்களை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

ட்ரூகாலரில் எஸ்.எம்.எஸ் செடியூல் செய்வது எப்படி?

  1. முதலில் ட்ரூகாலர் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்க.

  2. பின்னர் ட்ரூகாலர்-ஆப் ஐ திறந்து வலது கீழ் மூலையில் வழங்கப்பட்டுள்ள “+” பட்டனை அழுத்துக.

    நீங்கள் முதன் முதலாக ட்ரூகாலர் ஆப்-ஐ பயன்படுத்துபவர் எனின் உங்கள் மொபைல் இலக்கத்தை வழங்கி இலவச கணக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

3. இனி எஸ்.எம் எஸ் செய்ய வேண்டிய தொலைபேசி எண்ணை சேர்ச் பாரில் உள்ளிட்டு அம்புக்குறி பட்டனை அழுத்துக.

அல்லது உங்கள் போனில் சேமிக்கப்பட்டுள்ள நண்பரின் பெயரை சேர்ச் பாரில் உள்ளிட்டு அந்த காண்டாக்ட்-ஐ அழுத்துவதன் மூலம் எஸ்.எம் எஸ் செய்யும் பகுதிக்கு செல்க.

pure tamil tech news

4. பின் செடியூல் செய்ய வேண்டிய எஸ்.எம்.எஸ் ஐ டைப் செய்த பின்னர் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள “SMS” பட்டனை தொடர்ச்சியாக சிறிது நேரத்திற்கு அழுத்துக.

இதன் போது செடியூல் செய்வதற்கான பட்டன் தோன்றும்.


5. இறுதியாக செடியூல் பட்டனை அழுத்தி நீங்கள் டைப் செய்த குறுஞ்செய்தி அனுப்பப்பட வேண்டிய நாள் மற்றும் நேரத்தை தெரிவு செய்து “SCHEDULE SMS” என்பதை அழுத்திவிடுக.

அவ்வளவுதான்! இனி நீங்கள் செடியூல் செய்த குறுஞ்செய்தி குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் உங்களை அறியாமலேயே அனுப்பப்பட்டுவிடும்.






0 comments:

கருத்துரையிடுக