ஒரு காலத்துல ஒருத்தரும் எட்டிக்கூட பார்க்காத Zoom ஆப் ஆனது காட்டுத்தீ போல பரவிய (மீண்டும் பரவ வாய்ப்புள்ள) கோவிட்-19 தொற்றுநோய் ஆனது நாம் எவ்வாறு வேலை செய்கிறோம் மற்றும் எவ்வாறு ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறோம் என்கிற பாணியையே முழுவதுமாக மாற்றியது. ஒவ்வொரு உரையாடலுமே, சந்திப்புமே மெய்நிகர் வழியாகவே நடத்தலாம், நடக்க வேண்டும் என்கிற விர்ச்சுவல் கலாச்சாரத்தில் இமாலய எல்லைகளை தொட்டது. கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் கூட ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கின.
அதனொரு பகுதியாக மீட், ஜூம், டீம் போன்ற வீடியோ காலிங் தளங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி, அலுவலக மீட்டிங், ஆன்லைன் வகுப்புகள், நண்பர்கள், குடும்பத்தினர் சந்திப்பு போன்றவைகளை நடத்த தொடங்கின. அவ்வளவு ஏன் சில திருமணங்கள் கூட விர்ச்சுவலாக நடந்தன.
மேற்குறிப்பிட்ட அனைத்து தளங்களுமே மக்கள் தங்கள் வீட்டில் வசதியாக அமர்ந்து சக ஊழியர்களுடன், வகுப்பு ஆசியர்களுடன், சக உறவுகளுடன் இணைவதை எளிதாக்குவது மட்டுமல்லாமல், பயனர்களுக்கு ஒரு மீட்டிங்-ஐ ரெக்கார்ட் (பதிவு) செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
குறிப்பிட்ட மீட்டிங் முடிந்த பிறகும் கூட பயனர்கள் அதை மீண்டும் அணுக இந்த ரெக்கார்ட் அம்சம் உதவுகின்றன.
ஜூம் தற்போது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வீடியோ அழைப்பு தளங்களில் ஒன்றாகும், மேலும் இதுவும் வீடியோ அழைப்புகளைப் பதிவு செய்யும் திறனுடன் வருகிறது.
எப்படி என்று யோசிக்கிறீர்களா? அதை சாத்தியப்படுத்த நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ:
தொடங்கும் முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
- இலவச Zoom
பயனர்கள் "லோக்கலாக" மட்டுமே ரெக்கார்ட் செய்து அதை தங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்க முடியும்
- இந்த அம்சம் ஜூம் டெஸ்க்டாப் கிளையன்ட் எடிஷன் 2.0
அல்லது விண்டோஸ், மேக்ஓஎஸ் மற்றும் லினக்ஸிற்கான புதிய வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும்.
ஜூம் வீடியோ அழைப்புகளைப் பதிவு செய்வதற்கான எளிய வழிமுறைகள்:
1. Zoom meeting desktop client-இன் சமீபத்திய வெர்ஷனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும், பின்னர் லாக் இன் செய்யவும்.
2. இப்போது ஒரு புதிய மீட்டிங்கை நடத்துங்கள் அல்லது ஏற்கனவே உள்ள மீட்டிங்கில் சேருங்கள்
3. ஒரு மீட்டிங்கில் இணைந்தவுடன், வீடியோ கால் ஸ்க்ரீனின் மேல் இடது மூலையில் ஒரு ரெக்கார்ட் பட்டனைக் காண்பீர்கள், பதிவு செய்யத் தொடங்க அதைக் கிளிக் செய்யவும்
4. மீட்டிங் முடிந்ததும், ஜூம் தானாகவே File-ஐ சேமித்து, அது சேமிக்கப்படும் Folder-ஐ திறக்கும்.
ஒருவேளை குறிப்பிட்ட மீட்டிங்-ஐ ரெக்கார்ட் செய்வதை நீங்கள் நிறுத்த விரும்பினால், ஸ்க்ரீனின் கீழே உள்ள pause/stop
recording பட்டனைக் கிளிக் செய்யவும்.
ரெக்கார்ட் செய்த விடியோவை ஷேர் செய்வது எப்படி?
நீங்கள் விரும்பும் எந்தவொரு வழியிலும் பதிவு செய்யப்பட்ட Zoom
வீடியோ கால் கோப்புகளை பகிரலாம் என்பதை நினைவில் கொள்க. அதை ஒரு இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளம் வழியாகவோ அல்லது க்ளவுட்டில் பதிவேற்றுவதன் மூலமோ அல்லது பிஸிக்கல் ட்ரைவ் வழியாகவோ கூட பகிரலாம்.
என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 comments:
கருத்துரையிடுக