Smartphoneல் உள்ள வீடியோ, புகைப்படம் உட்பட எல்லாவற்றையும் டிவி-யில் போட்டு பார்க்கலாம்! எளிய வழி இதோ...

ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்தையும் வீட்டில் உள்ள டிவியில் குடும்பத்தாருடன் சேர்ந்து ஒன்றாக பார்க்க பல வழிகள் உள்ளன.

அதில் ஒன்று உங்கள் கட்டை விரலால் ஒரே ஒரு அழுத்து அழித்து உடனே அதை ஸ்மார்ட்போனில் இருந்து டிவிக்கு மாற்றுவது ஆகும்.

மிக எளிதான அந்த அம்சத்தின் பெயர் ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring).

நம்முடைய ஸ்மார்ட் டிவியில் பெரும்பாலானவை ஸ்கிரீன் மிரரிங் எனப்படும் உள்ளமைக்கப்பட்ட அம்சத்துடன் வருகிறது என்பது நம்மில் பலருக்குத் தெரியாதது.

மிராஸ்காஸ்ட் அல்லது ஸ்கிரீன் மிரரிங் விருப்பம் முழு ஸ்மார்ட்போனையும் பிரதிபலிக்கும்.

ஸ்கிரீன் மிரரிங் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள மொத்த விடயங்களையும் டிவியில் பார்ப்பது எப்படி?

1. உங்கள் டிவியில் ஸ்க்ரீன் மிர்ரரிங் அல்லது மிர்ராகாஸ்ட் என்ற ஆப்சனை முதலில் ஒப்பன் செய்ய வேண்டும்.

2. இப்போது ஸ்க்ரீன் மிர்ரரிங் என்ற ஆப்சனை உங்கள் ஸ்மார்ட்போனில் ஒப்பன் செய்யவும்.

3. உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி ஆகிய இரண்டும் ஒரே வைபை நெட்வொர்க்கில் தான் இயங்குகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

4. இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் உங்கள் டிவியின் பெயர் லிஸ்ட் தெரிந்தவுடன் அதன் மீது டேப் செய்யுங்கள்.

5.இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் உள்பட அனைத்தையும் டிவியில் பார்க்கலாம்.



0 comments:

கருத்துரையிடுக