வாட்ஸ்அப் நிறுவனம் தனது UPI பேமெண்ட்ஸ் அம்சத்தை பயனர்களிடம் பிரபலப்படுத்த கேஷ்பேக் வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் UPI பேமெண்ட்களை பொறுத்தவரை ஏற்கனவே Google Pay, PhonePe, Paytm போன்ற நன்கு அறியப்பட்ட ஆப்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், தானும் இந்த பட்டியலில் சேர வாட்ஸ்அப் நிறுவனம் தனது UPI பேமெண்ட்ஸ் அம்சத்தை பயனர்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
பேஸ்புக்கிற்கு சொந்தமான மற்றும் உலகம் முழுவதும் பிரபல மெசேஜிங் App-ஆக இருந்து வரும் வாட்ஸ்அப்-பின் லேட்டஸ்ட் அம்சங்களில் ஒன்று தான் வாட்ஸ்அப் பேமண்ட்ஸ்.
இந்தியாவிலேயே கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப்பை மெசேஜிங் காரணங்களுக்காக பயன்படுத்தினாலும் கூட, இதன் பேமெண்ட்ஸ் ஆப்ஷனை யாரும் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. எனவே வாட்ஸ்அப் தனது பேமெண்ட்ஸ் அம்சத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் தனது பேமெண்ட்ஸ் அம்சத்தை மார்க்கெட்டிங் செய்ய, போட்டியாளரான கூகுளின் பேமெண்ட் சேவையான Google Pay-வை போலவே கேஷ்பேக் ஆஃபர்களை கொண்டு வரலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வாட்ஸ்அப் டிராக்கரான WABetaInfo-ன் தகவலின் படி, வாட்ஸ்அப் மூலம் செய்யப்படும் UPI பேமெண்ட்ஸ்களுக்கு, விரைவில் வாட்ஸ்அப் கேஷ்பேக் சலுகைகளை தர உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இந்த அம்சம் இன்னும் டெவலப்பிங் ஸ்டேஜில் உள்ளது மற்றும் பீட்டா டெஸ்டர்ஸுக்கு இது சென்றடைய இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
2018-ஆம் ஆண்டின் துவக்கத்தில் வாட்ஸ்அப் யுபிஐ அடிப்படையிலான பேமெண்ட்ஸ்களை அறிமுகப்படுத்தியது. எனினும் இந்த சேவை சில வருடங்கள் பீட்டா வெர்ஷனில் இருந்தது, அதே நேரத்தில் வாட்ஸ்அப் யுபிஐ சேவைகளை வழங்க தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு, அனைத்து யூஸர்களுக்கும் வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. என்றாலும் கோடிக்கணக்கான இந்திய யூஸர்களை கொண்ட வாட்ஸ்அப்-பின் இந்த புதிய அம்சம் நாட்டில் பெரியளவில் இன்னும் வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் அடுத்தடுத்து வரும் வாட்ஸ்அப் வெர்ஷன் அப்டேட்களின் போது இந்த சலுகை அம்சம் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் WABetaInfo தகவல் தெரிவித்து, வரவிருக்கும் அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட்டயும் சோஷியல் மீடியா போஸ்ட்டில் சேர்த்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக