இப்போது உள்ள தலைமுறைகளுக்கு பிடிக்காத விடயம் என்றால் ஸ்மார்ட்போனில் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிடுவது தான்.
ஸ்மார்ட்போனில் வேகமாக சார்ஜ் ஏற வேண்டும் என பலரும் விரும்புவார்கள்.
உங்களின் ஸ்மார்ட்போன்களை வேகமாக சார்ஜ் செய்ய சில எளிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்
சரியான சார்ஜரை மட்டும் பயன்படுத்த வேண்டும்
ஸ்மார்ட்போன்களை எப்போதும் அதனுடன் வழங்கப்பட்ட சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும். வீடு அல்லது அலுவலகம் போன்ற இடங்களில் கணினி இருக்கிறது என்பதற்காக கணினியில் யுஎஸ்பி கொண்டு சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். யுஎஸ்பி கொண்டு சார்ஜ் செய்யும் போது சார்ஜ் ஆக வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்து கொள்ளும். ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்ய சாதாரண சார்ஜரை மட்டும் பயன்படுத்தினால் வேகமாக சார்ஜ் செய்யலாம்.
ஏர்பிளேன் மோட்
ஸ்மார்ட்போனினை எத்தனை நிமிடங்கள் சார்ஜ் செய்தாலும் அதனினை ஏர்பிளேன் மோடில் (Airplane Mode) வைத்து சார்ஜ் செய்தால் சீக்கிரம் சார்ஜ் செய்திட முடியும். ஏர்பிளேன் மோடில் இருக்கும் போது ஸ்மார்ட்போனில் இணையம், மற்றும் நெட்வொர்க் சிக்னல் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டை நிறுத்தி போனின் இயக்கத்தை குறைக்கும். இதனால் ஸ்மார்ட்போனில் வேகமாக சார்ஜ் ஆகிவிடும். ஏர்பிளேன் மோடில் இருக்கும் போது உங்களுக்கு எவ்வித அழைப்பும், குறுந்தகவல்களும் வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தேவையற்ற அம்சங்களை நிறுத்தினால் சார்ஜ் வேகமாக ஏறும்
ஸ்மார்ட்போனில் வை-பை, ப்ளூடூத், என்எஃப்சி, மொபைல் டேட்டா உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆஃப் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போதும் சார்ஜ் சீக்கிரம் நிரப்பப்படும். ஸ்மார்ட்போனில் தேவையற்ற அம்சங்களை ஆஃப் செய்து வைப்பதன் மூலம் சார்ஜிங் வழக்கத்தை விட வேகமாக இருப்பதை காண முடியும்.
0 comments:
கருத்துரையிடுக