உங்கள் ஸ்மார்ட்போனில் இரண்டு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தால் அது எப்படி இருக்கு? நீங்கள் விரும்பினால், உங்கள் ஸ்மார்ட்போனில் இரண்டு வெவ்வேறு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்தலாம்.
மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் இந்த நாட்களில் அனைவரின் ஸ்மார்ட்ஃபோன்களிலும் உள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் WhatsApp-ல் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள். புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் இதில் விரைவாக பகிரப்படுகின்றன. வாட்ஸ்அப் குழுக்கள் இன்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு சிறந்த வழியாக மாறிவிட்டன.
அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஸ்மார்ட்போனில் இரண்டு WhatsApp
கணக்குகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தால் அது எப்படி இருக்கு? ஆம்!!
நீங்கள் விரும்பினால், உங்கள் ஸ்மார்ட்போனில் இரண்டு வெவ்வேறு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்தலாம்.
இதற்காக நீங்கள் சில சிறப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அந்த வழிமுறைகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்:
- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனின் (smart phone)
‘setting'-க்குச் செல்லவும்.
- கீழ் நோக்கி ஸ்க்ரோல் (scroll) செய்யவும்.
- அப்ளிகேஷன் (application) மற்றும் பர்மிஷன்கள் (permission)
மீது டேப் செய்யவும்.
- இங்கே ‘ஆப் கிளோன் ஃபீச்சர்’
(App Clone Feature) என்ற அம்சத்தைக் காண்பீர்கள்.
அதில் கிளிக் செய்யவும்.
- இப்போது வாட்ஸ்அப்பில் கிளிக் செய்யவும்.
- கிளிக் செய்தவுடன் WhatsApp குளோன் செய்யப்படும்.
- இனி உங்களது ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு மொபைல் எண்ணின் WhatsApp
-ஐயும் இயக்க முடியும்.
வாட்ஸ்அப்பின் புதிய அம்சம் உங்களுக்குத் தெரியுமா?
- வாட்ஸ்அப் ஒரு சிறப்பு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
- இந்த புதுப்பிப்பு வாட்ஸ்அப் குழு அழைப்புக்கானது.
- புதிய புதுப்பிப்பின் படி குழு அழைப்பு
(Group Calling) எளிதாகிவிடும்.
- புதிய புதுப்பிப்புக்குப் பிறகு, பயனர்கள் குழு அழைப்பில் எத்தனை பேர் இணைக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேர் இணைக்கப்படவில்லை என்பதை பார்க்க முடியும்.
- இந்த அம்சம் கூகுள் மீட் மற்றும் ஜூம் போன்ற வீடியோ அழைப்பு செயலிகளுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்போது வரை வாட்ஸ்அப் குழுக்கள் அழைப்பு தொடங்கப்பட்ட பின்னரே அந்த அழைப்பில் சேர முடியும்.
- ஒரு குழு அழைப்பின் போது ஒரு பயனர் மட்டுமே மற்றொருவரை சேர்க்க முடியும்.
- பயனர் WhatsApp user அழைப்பைத் தவறவிட்டால், அழைப்புடன் மீண்டும் இணைவதற்கான விருப்பம் அவருக்கு கிடைப்பதில்லை.
- இதைச் செய்ய, குழு அழைப்பின் போது ஒரு உறுப்பினரைச் சேர்க்கும் கோரிக்கை அனுப்பப்பட வேண்டும்.
- ஆனால் புதிய அம்சத்தின் வருகையால், நீங்கள் ஒரு குழு அழைப்பைத் தவறவிட்டாலும் மீண்டும் அதில் இணைய முடியும்.
என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 comments:
கருத்துரையிடுக