உலகில் தற்போது ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரிடமும் வாட்ஸ் அப் என்ற ஆப் இல்லாமல் இருக்காது.
அந்தளவிற்கு இந்த வாட்ஸ் ஆப் மக்களோடு மக்களாக ஒன்றி பிணைந்துவிட்டது என்று கூறலாம். இதன் காரணமாக பல அப்டேட்கள் வாட்ஸ் அப் பக்கம் இருந்து வந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் இப்போது ஒரு செம அப்டேட் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த அப்டேட்டை தற்போதைக்கு ஐபோன் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியுமாம், விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த அப்டேட் என்னவென்றால் வியூ ஒன்ஸ் என்ற அப்டேட் தான், அதாவது, ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒரு முறை பார்க்கப்பட்ட பின்னர் அது சாட்டில் இருந்து தானாகவே மறைந்துவிடும்.
அது பெறுபவரின் கேலரியில் புகைப்படமோ, வீடியோவோ சேமிக்கப்படாது. இதுதவிர, வாட்ஸ்ஆப்பின் வழியாக மற்றொருவருக்கும் அவற்றை அனுப்ப முடியாது.
புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்புவதற்கு முன்னதாக, கேப்ஷன் பார் அருகில் தோன்றும் ஒன்று என்ற ஐகானை பயன்படுத்துவதன் மூலம் வியூ ஒன்ஸ் வசதியை நாம் பயன்படுத்த முடியும்.
இந்த அப்டேட் பலருக்கும் மிகவும் பிடித்து போய் உள்ளதால், இது எப்போது தான் ஆண்ட்ராய்டு போனுக்கு வரும் காத்துக்கிடக்கின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக