சீனாவின் வளர்ந்து வரும் தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான ரியல்மீ, Realme 8 தொடரில், Realme 8s மற்றும் Realme 8i ஆகிய இரண்டு போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. Realme 8i பற்றிய தகவல்கள் பலருக்கு தெரிந்திருந்தாலும், Realme 8s பற்றிய எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், 91Mobiles பகிர்ந்த தகவலின் படி, Realme 8s குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன.
Realme 8s-ன் தோற்றம் இப்படி இருக்கும்
போனின் முன் பகுதி பற்றி அதிக விவரங்கள் தெரியவில்லை. ஆனால் அதன் பின் பகுதியின் வடிவமைப்பு சற்று வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தொலைபேசியின் பின்புறத்தில் ரியல்மீ பிராண்டிங் இருக்கும், அது ஊதா நிறத்தில் இருக்கும். இதில் 6.5-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் FHD+ பேனல் இருக்கக்கூடும்.
கேமராவின் அம்சங்கள் அதிர வைக்கும் வகையில் இருக்கும்
Real me 8s இன் கேமரா செவ்வக வடிவில் இருக்கும். இது செங்குத்தாக தொலைபேசியில் பொருந்தி இருக்கும். கேமராவில் ஒரு குவாட்-கேமரா அமைப்பு மற்றும் ஒரு சிறிய LED ஃப்ளாஷ் இருக்கும். சந்தையில் பரவும் ஊகங்களை கருத்தில் கொண்டால், இதில் பின்புறத்தில் 64 எம்பி பிரைமரி லென்ஸ் மற்றும் முன்பக்கத்தில் 16 எம்பி ஒற்றை கேமரா லென்ஸ் இருக்கக்கூடும். மீதமுள்ள சென்சார்கள் அல்ட்ரா-வைட் லென்ஸைக் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
ஸ்டோரேஜ் வசதிகள் எப்படி இருக்கும்?
Realme 8s மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இதனுடன் 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு இருக்கும். BBK மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மற்ற தொலைபேசிகளைப் போலவே, இதிலும் 5 ஜிபி வரையிலான Virtual RAM Support இருக்கும்.
Realme 8s-ன் மற்ற சிறப்பு அம்சங்கள்
தொலைபேசியின் வலது பக்கத்தில் ஒரு சைட்-ஃபேசிங் கைரேகை ஸ்கேனர் மற்றும் இடதுபுறத்தில் ஒரு சிம் தட்டு இருக்கக்கூடும். மேலும், போனில் USB டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக், ஸ்பீக்கர் கிரில் மற்றும் மேலே செகண்டரி மைக்ரோஃபோன் இருக்கக்கூடும்.
தொலைபேசியின் 5,000 mAh பேட்டரி 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் ஆதரிக்கப்படும். Realme 8s 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கலாம். மென்பொருளைப் பற்றி பேசுகையில், இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான Realme UI 2.0 இல் இயங்கும்.
Realme இந்த ஆண்டு, Realme 8 தொடரில், Realme 8, 8 5G மற்றும் 8 Pro ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 91Mobiles மூலம் வெளியிடப்பட்ட இந்த தகவல்கள் எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பதையும் மக்கள் இதற்கு எவ்வறவு ஆதரவு தருகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வெண்டும்.
0 comments:
கருத்துரையிடுக